முகப்பு / விசேட பதிவுகள் / 2019 ஆண்டுப் போட்டிகள்.

2019 ஆண்டுப் போட்டிகள்.

டென்மார்க் 
சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 12 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2019

          பண்ணிசை பாடுவோம் பரிசாகத் தங்கம் வெல்லுவோம் !!


டென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 12 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட  பண்ணிசை, பொது அறிவு, மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள்  03-11-2019  அன்று ஞாயிற்றுக்கிழமை 13.30 மணிக்கு பரடேஸியா அலே பாடசாலை மண்டபத்தில்  நடைபெறவுள்ளன. பங்குகொள்ள விரும்பும் போட்டியாளர்கள் கீழேயுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்திசெய்து 01-10-2019  க்கு முன்னதாக  அனுப்பிவைக்கவும். விண்ணப்ப திகதி முடிவடைந்த பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

பண்ணிசையில் முதலாம் இடம் பெறுபவர்களுக்குத் தங்கப் பதக்கமும் பேச்சுத்திறன் மற்றும் அறிவுத்திறன் போட்டியில் முதலாம் இடம் பெறுபவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும். 

பண்ணிசைப் போட்டியில் ஓரு பிரிவில் சென்றமுறை தங்கப்பதக்கம் பெற்றவர் அதே பிரிவில் இம்முறையும் முதலாவது வருமிடத்துத் தங்கப் பதக்கம் வழங்கப்பட மாட்டாது. இரண்டாம் இடத்தில் வருபவருக்கு அணியப்படும்.

 

மேலதிக தொடர்புகளுக்கு

சோதிராசா (தலைவர்): 50524155

பகீரதன்(செயலாளர்): 21770564 

 கலாதரன்(பொருளாளர்): 26812966

மேலும் வாசிக்க

பண்ணிசைப்போட்டி 2019

  ஒளவையார் பிரிவு இது மழலைகளுக்கான பிரிவு (31-07-2013 க்குப் பினனர் பிறந்தவர்கள்). தரப்பட்ட இரண்டு தேவாரத்தில் ஏதாவதொன்றையும் அத்துடன் …