முகப்பு / Ikke kategoriseret / கேள்வி பதில் 2019

கேள்வி பதில் 2019

சம்பந்தர் பிரிவுக்கான கேள்வி பதில்
கீழேயுள்ள 10 வினாக்களில் கேட்கப்படும் 8 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். 

கீழ்ப் பிரிவு.

1.சைவசமயத்தின் முழுமுதற்கடவுள் யார்.?

சிவபெருமான்

2.சிவபெருமானின் சக்தியார்?

உமாதேவியார்.

3.முத்தொழில்கள் எவை ?

படைத்தல்,காத்தல்,அழித்தல்.

4.முருகன் தோன்றிய இடம் எது ?

சரவணப்பொய்கை

5.பிள்ளையாரின் மறுபெயர்கள் என்ன ?

விநாயகன்,கணபதி,விக்கினேஸ்வரன்.

6.கோவிலுக்கு அருகே சென்றவுடன் யாதுசெய்தல் வேண்டும் ?

கோபுரத்தை வணங்க வேண்டும்

7.சைவசமய குரவர்கள் யாவர் ?

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிக்கவாசகர்

8.திருநாவுக்கரசரின் அக்காவின் பெயர் என்ன ?

திலகவதியார்

9.திருநாவுக்கரசரின் பெற்றோர்கள் பெயர் என்ன ?

புகழனார்,  மாதினியார்

10. கோவில் பூசைக்கு பாவிக்காத பூ என்ன ?

தாழம்பூ

11. ஆத்தி சூடி கொன்றை வேந்தன் இயற்றியவர் யார்?

ஒளவையார்

12. சுந்தரரிடம் நீ என் அடிமை எனக் கூறியவர் யார் ?

சிவபெருமான்

 

அப்பர் பிரிவுக்கான கேள்வி பதில்

கீழேயுள்ள 18 வினாக்களில் கேட்கப்படும் 15 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். 

1. அப்பூதி அடிகள் தனது தண்ணீர்ப்பந்தலுக்கு யார் பெயரை வைத்தார்?

திருநாவுக்கரசுநாயனார் பெயரை வைத்தார்

2.  சிறு பிள்ளைகளுக்கு ஏடு எப்போது தொடக்குவார்கள்?
விஜயதசமியன்று.

3. திருஞானசம்பந்தர் தாய் தந்தை பெயர் என்ன?
சிவபதவிருதயர் பகவதியார்.

4.முருகனின் மறுபெயர்கள் என்ன ?
கந்தன், கார்த்திகேயன், கடம்பன், ஆறுமுகன்,

5. தோடுடைய செவியன்  என்ற தேவாரம் பாடியவர் யார் ?
திருஞானசம்பந்தர்.

6. பாடசாலை,  கோவில், மற்றும் வீடுகளில் கொண்டாடப்படும் விழா எது ?
நவராத்திரி .

7. கந்தசஸ்டி எந்த மாதத்தில் கொண்டாடப்படும் ?
ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படும்.

8. முருகனின் வாகனம் எது ?
மயில்.

9. பாசம் எத்தனை வகைப்படும் ?அவை எவை ?
மூன்று வகைப்படும் . ஆணவம்  கன்மம்  மாயை .

10. மந்திரமாவது நீறு யாரால் பாடப்பட்டது ?
திருஞான சம்பந்தரால் பாடப்பட்டது.

11. திருக்குறளை இயற்றியவர் யார் ?
திருவள்ளுவர் .

12. ஆறுமுகனுக்கு எத்தனை தோள்கள் உண்டு ?
பன்னிரண்டு தோள்கள் உண்டு.

13. சிவபெருமானின் இரு புதல்வர்கள் யார் ?
பிள்ளையார்  முருகன்

14. கோவிலுக்குள் சென்றவுடன் யாரை வணங்குதல் வேண்டும் ?
பிள்ளையார்

15. முக்கனிகள் எவை ?
மாம்பழம்  பலாப்பழம் வாழைப்பழம்

16. சுண்ணாம்பு அறையில் திருநாவுக்கரசரை அடைத்தபோது என்னதேவாரம் பாடினார் ?
மாசில் வீணையும் .

17. ஆத்தி சூடி கொன்றை வேந்தன் இயற்றியவர் யார்?

ஒளவையார்

18.முருகன் தேவர்களைக் காக்க என்ன செய்தார்?

சூரனை வதம் செய்து கொன்றார்.

 

சுந்தரர் பிரிவுக்கான கேள்வி பதில்.

1. சிவனுடைய திருத்தலங்கள் மூன்று எவை?
திருவண்ணாமலை,  சிதம்பரம், இராமேஸ்வரம் ஆகியன.

சிவனோடு தோழனாக இருந்த நாயனார் யார்?
சுந்தரமூர்த்தி நாயனார்.

3. இரண்டு புண்ணிய நதிகள் யாரை?
கங்கை, காவேரி

4. சுந்தரமூர்த்தி நாயனாரின் மனைவிமார்கள் யார்?
பரவையார், சங்கிலியார்

5. ஈழத்தின் புகழ்பெற்ற சிவாலயங்கள் இரண்டு கூறுக?
திருக்கேதீஸ்வரம்,  திருக்கோணேஸ்வரம்.

6. சம்பந்தர் பாடிய தேவாரங்கள் எத்தனையாம் திருமுறையில் உள்ளன?
முதலாம்,  இரண்டாம்,  மூன்றாம் திருமுறைகள்.

7. திருமுறைகளைத் தொகுத்தளித்தவர் யார்?
சேக்கிழார் நாயனார்

8. வைகைநதி ஏன் பெருக்கெடுத்தது?
மாணிக்கவாசகப் பெருமானை மன்னன் வருத்தியதால்

9. அணைகட்ட முடியாமல் தவித்த மூதாட்டி யார்?
செம்மனச் செல்வி

10. மும்மலங்களும் எவை?
ஆணவம், கன்மம், மாயை என்பவையாகும்.

11. சிவபெருமானின் உறைவிடமாகக் கருதப்படும் மலை எது?
திருக் கயிலை

12. வானுலகுக்கு அதிபதி யார்?
தேவேந்திரன்

13. திலகவதியார் யார்?
திருநாவுக்கரசு நாயனாரின் தமக்கையார்

14. திருமூலர் அருளிச்செய்த பாடல்கள் எப்படி அழைக்கப்படும்?
திருமந்திரம் என்று அழைக்கப்படும்.

15. திருக்குறள் யாரால் எழுதப்பட்டது ? அதில் எத்தனை குறள்கள் உள்ளன?
திருவள்ளுவர்,  1330 குறள்கள்.

16. ஆறுமுக நாவலர் எங்கே பிறந்தார்?
யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தார்.

17. பிள்ளையைக் கறியாகச் சமைத்துக் கொடுத்த நாயனார் யார்?
சிறுத்தொண்டர் நாயனார்

18. இந்து சமயத்தின் பிரிவுகள் எவை?
சைவம், வைணவம், சாக்தம் என்பன

19. சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட தலம் எது?
திருவெண்ணை நல்லூர்

20. ‘பாலும் தெளிதேனும்’ என்ற பாடல் யார் பாடியது?
ஒளவைப் பிராட்டியார்.

மாணிக்கவாசகர் பிரிவுக்கான கேள்வி பதில்

1. சைவசமயத்தவரின் முழுமுதற் கடவுள் யார்?
(சிவபெருமான்)
2. கருமம் வெற்றிபெற முதலில் வணங்கப்படும் கடவுள் யார்?
(பிள்ளையார்)
3. சிவபெருமானின் சக்தி யார்?
(உமாதேவியார்)
4. சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவர் யார்?
(முருகன்)
5. திருவாசகம் பாடியவர் யார்?
(மாணிக்கவாசகர்)
6. ‘தோடுடைய செவியன்…’ என்னும் தேவாரம் பாடியவர் யார்?
(சம்பந்தர்)
7. பாட்டி சுட்டபழம் வேண்டுமா? சுடாதபழம் வேண்டுமா?
என்று ஒளவையாரிடம் கேட்டவர் யார்?
(முருகன்)
8. சேக்கிழார் பாடிய நூல் எது?
(பெரியபுராணம்)
9) திருஞானசம்பந்தர் பிறந்த இடம்
சீர்காழி
10) ஆத்திசூடி யாரால் பாடப்பட்டது?
ஒளவைப்பிராட்டியால்.
11) சைவவினாவிடை ஆசிரியர் யார்?
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள்.
12) திருவருட்பயன் ஆசிரியர் யார்?
உமாபதி சிவாச்சாரியார்.
13) டென்மார்க்கின் பிரபல சித்திவிநாயகர் ஆலயம் எங்கே உள்ளது?
கேணிங் நகரில் உள்ளது.
14) டென்மார்க்கின் பிரபலமான அம்மன் கோயில் எது?
 பிரண்டா அம்மன் ஆலயம்.
15) பஞ்சபூதத்தலங்களில் நெருப்புக்குரிய திருத்தலம் எது?
திருவண்ணாமலை
16) ‘பித்தா பிறைசூடி’ என்னும் தேவாரத்தைப் பாடியவர் யார்?
(சுந்தரர்)
17) சைவத் திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி
18) நித்திய கிரியைகள் என்றால் என்ன?
ஆலயத்தில் தினசரி நடக்கும் பூசைகள்.
19) மூலவர் யார்? உற்சவர் யார்?
மூலஸ்தானத்தில் இருப்பவர் மூலவர்
வீதிவலம் வந்து அருள்பாலிப்பவர் உற்சவர்.
20) சைவமதச் சின்னங்கள் எவை?
திருநீறு, உருத்திராட்சம்

மேலும் வாசிக்க

2019 ஆண்டுப் போட்டிகள்.

டென்மார்க்  சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 12 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2019   …