முகப்பு / Ikke kategoriseret / கேள்வி பதில்

கேள்வி பதில்

சம்பந்தர் பிரிவுக்கான கேள்வி பதில்
கீழேயுள்ள 15 வினாக்களில் கேட்கப்படும் 10 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். அத்துடன் சம்பந்தர் பிரிவு பேச்சுப்போட்டிப் பந்தியில் இருந்து கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
 

1) திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட முதல் தேவாரம்.

தோடுடைய செவியன்

2) சிவ விரதங்கள் இரண்டு தருக.

திருவாதிரை விரதம்  ,  கேதாரகௌரி விரதம்

3)சித்தியையும் புத்திணயயும் சக்திகளாகக் சகாண்ட கடவுள் ?

விநாயகர்

4) திருஞானசம்பந்தர்,  திருநாவுக்கரசர், சுந்தரர் என்போர் யாவர்?

சமய குரவர்கள்

5. ஈழத்தில் (இலங்கையில்) திருகோணேச்சுரத்தில் அருள் பாலிப்பவர்?

சிவபெருமான்

6) ஈழத்தில் பாடல் பெற்ற தலங்கள் இரண்டு தருக.

திருகோணேச்சுவரம், திருகேதீச்சுரம்

7)ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க’ என்று இறைவனைப்  பாடியவர் யார்!

மாணிக்கவாசக சுவாமிகள்

8. கீரி மலை என்று அழைப்பது!

நகுலேச்சுரம்

9) யாழ்ப்பாணம் நல்லுர் கந்தன் ஆலயத்தில் மூலமுர்த்தி

முருகப்பெருமான்

10) ஈழத்தில் (இலங்கை) இராவணன் வெட்டு எங்கே உள்ளது ?

திருகோணமலை

11) இராமாயணத்தை எழுதியவர்.

வால்மீகி

12) மாகாபாரதத்தை எழுதியவர்.

வேதவியாசர்

13 ) மாகாபாரதத்தில் கண்ணன் யாருக்கு உபதேசித்தார்?

அருச்சுனனுக்கு

14) மாம்பழக்கதை எதை விளக்குகிறது?

அம்மை அப்பனை உலகம் என்று எடுத்துக் காட்டுவதை

15) கதிர்காமம் இலங்கையில் எந்தப் குதியில் அமைந்துள்ளது?

மாத்தறை

 

அப்பர் பிரிவுக்கான கேள்வி பதில்
கீழேயுள்ள 20 வினாக்களில் கேட்கப்படும் 15 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். அத்துடன்  அப்பர் பிரிவு பேச்சுப்போட்டிப் பந்தியில் இருந்து கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
1) தழிழ் நாட்டில்  தஞ்சைப்பெரிய கோவிலைக் கட்டுவித்த மன்னன் யார்?
இராசராசசோழன்
2 ) சைவ நாற்பதங்கள்  எவை?
சரியை, கிரிகை, ஞானம், யோகம்
3) ஆழ்வார்களின் எண்ணிக்கை எத்தனை ?
பன்னிரண்டு
4 ) சித்தியையும் புத்தியையும் சக்திகளாகக் கொண்ட கடவுள் ?
விநாயகர்
5) ‘ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க’ என்று இறைவனைப்  பாடியவர்!
மாணிக்கவாசகர்
6) விநாயகப்பெருமானுக்குரிய விரதம் ஒன்று!
பெருங்கதை
7) சிவ சம்மந்தமுடையது!
சைவம்
8)  திருநீறு தரித்து சந்தனம், குங்குமம், பொட்டு இடுதல் என்பன எப்போது இடம்பெறும்?
இறைவழிபாட்டிற்குப் பின்பு
9) தினந்தோறும் ஆலயத்தில் நடைபெறுவது!
நித்திய கிரியை
10) பதி என்பதன் பொருள் .
 காப்பவன்
11) முதல் ஏழு திருமுறைகளும் எவ்வாறு அழைக்கப்படும்?
தேவாரம்
12) திருவாசகம் பாடியவர்!
மாணிக்கவாசகர்
13) பஞ்சபுராணம் பாடும்போது  இரண்டாவதாகப் பாடப்படுவது!
திருவாசகம்
14) ஆடிப்பிறப்பு, நவராத்திரி, கார்திகைவிளக்கீடு என்பன கொண்டாடப்படுவது!
வீடுகளில், பாடசாலைகளில் ஆலயத்தில்
15) சக்திக்குரிய தினம்!
மாசிமகம்
16) திருமுறைகள் எத்தனை?
பன்னிரண்டு
17) முத்தமிழ் வித்தகர் எனப் போற்றப்படுபவர் யார்?
சம்பந்தர்
18) மாணிக்கவாசகர் முக்தி பெற்ற தலம்!
தில்லைச்சிற்றம்பலம்
19) சம்பந்தர் செய்த அற்புதங்களில் இரண்டு கூறுக.
பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்கியது
படிக்காசு பெற்றது
20) சிவ சிவ என்கிலர் என பாடியவர்!
திருமூலர்
சுந்தரர் பிரிவுக்கான கேள்வி பதில்
கீழேயுள்ள 20 வினாக்களில் கேட்கப்படும் 15 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். அத்துடன் சுந்தரர்  பிரிவு பேச்சுப்போட்டிப் பந்தியில் இருந்து கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.

1) அருணகிரிநாதரால் பாடப்பட்டது!

திருப்புகழ்

2) ஈழத்தைச் சிவபூமியெனக் ௯றியவர்!

திருமூலர்

3) பாற்கடல் கடைந்தபுராணம் கதை ௯றும் தேவாரம்!
இடரினும் தளரினும்
4) மாவிட்டபுரம் என்று ஏன் அழைக்கப்படுகிறது?
குதிரைமுகம் நீங்கியதற்காக
5) மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் எங்கே (ஈழத்தில் எந்தமாவட்டத்தில்)அமைந்துள்ளது ?
யாழ்பாணம்

6) திருக்கேதீச்சரநாதன் மீது தேவாரப்பதிகம்  பாடிய நாயன்மார்கள் யாவர்?

சம்பந்தர், சுந்தரர்

7) கோவிலில் சிரசைக் குறிப்பது!
கொடிமரம்
8) தமிழில் சிவாகமப்  பொருளைக் ௯றும் நூல் எது?
திருமந்திரம்
9) மார்கழி மாதத்தில் சிறப்பாகப் பாடப்படுவது!
திருவெம்பாவை
10) நயினை நாகபூசனி அம்மன் இறைவி!
புவனேஸ்வரி
11) குளிர்ச்சியை வேண்டி வழிபடப்படும் தெய்வம்  !
மாரியம்மன்
12) இலங்கைக்குக் (ஈழத்திற்கு) கயவாகு மன்னனால் கொண்டுவரப்பட்ட வழிபாடு!
கண்ணகி வழிபாடு
13) வாயைத் துணியினாற் கட்டி மவுனமாகப் பூசை செய்பவர்கள் ?
கப்புறாளை

14) முருகனின் வேல் குறிக்கும் சக்தி என்ன?

ஞான சக்தி

15) ஆழ்வார்களால்  பாடப்பட்டது எது?
திருமொழி
16) பஞ்சபூதங்கள் (ஐம்பெரும் சக்திகள் ) என்று குறிப்பிடப்படுவது !
 நிலம்,  நீர், நெருப்பு,  காற்று, ஆகாயம்

17) சமணர்களால்  நீற்றறையில் விட்டுப் பூட்டிவைக்கப்பட்டவர்.

அப்பர்

18) தமிழில் வேதம் எனப் போற்றப்படுபவை எவை?
தேவாரம், திருவாசகம்
19) சைவ நெறியினில் மேலாக மதிக்கப்படுவது!
  அன்பு
20) திருநாவுக்கரசரைக் கல்லுடன் கட்டிக் கடலினுள் போட்ட போது பாடியத் திருப்பதிகம் எது?
சொற்றுணை வேதியன்
மாணிக்கவாசகர் பிரிவுக்கான கேள்வி பதில்
கீழேயுள்ள 20 வினாக்களில் கேட்கப்படும் 15 வினாக்களுக்கு விடைகூறுதல் வேண்டும். அத்துடன் மாணிக்கவாசகர்  பிரிவு பேச்சுப்போட்டிப் பந்தியில் இருந்து கேட்கப்படும் 5 கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும்.
1) பித்தா பிறைசூடி பெருமானே யருளாளா  என்று பாடியவர் யார்?
சுந்தரர்
2) திருநாவுக்கரசரை  எத்தனை நாட்கள் சுன்ணாம்பறையில் வைத்துப் பூட்டினர்?
7 நாட்கள்
3) ஐம்பெரும் காப்பியங்களில்  இரண்டு தருக.
சிலப்பதிகாரம், மணிமேகலை
3) மாகபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யாவர்?
பாண்டுவின் புதல்வர்களை

4) இராமயணத்தில் எத்தனை காண்டங்கள்  உள்ளன?

12 காண்டங்கள்

5) இராமனோடு துணையாகக் காட்டிற்குச் சென்றவர் யார்?
இலட்சுமணன்
6) இராமனின் தாயின் பெயர்  என்ன?
கோசலை
7) ஐந்தொழில் தத்துவத்தை உணர்த்துவது எது?
கொடியேற்றம்

8) இலக்குமணனோடு கூடிப்பிறந்த தம்பி யார?

சத்ருக்கன்

9) கைகேகி இராமனை எத்தனை ஆண்டுகள் காட்டில் வாழும்படி கட்டளை இட்டாள்?
14ஆண்டுகள்
10) சகலகலாவல்லி மாலை பாடியவர் !
 குமரகுருபரர்

11) சைவ சமயத்தவர்கள் முழு முதற் கடவுளாக் கொண்டு வழிபடுவது!

சிவன்

12) மாதொருபாகன் எனக்குறிப்பிடப் படுபவர் யார்?

சிவபெருமான்

13) மணிமேகலை காப்பியத்தோடு தொடர்புடைய தலம் எது?
நயினை நாகபூஷணி அம்மன் திருத்தலம்
14) திருமுறைகளை தொகுப்பித்தவர் யார்?
நம்பியாண்டார் நம்பி

15) திருஞானசம்பந்தர்  நின்ற நெறி  எது?

கிரியை

16) திரிபுரத்தை எரித்தவர் யார்?
சிவன்
17 ) சைவ நாற்பதங்கள்  எவை?
சரியை, கிரிகை, ஞானம், யோகம்
18) ஆழ்வார்களால்  பாடப்பட்டது எது?
திருமொழி
19) தமிழில் சிவாகமப்  பொருளைக் ௯றும் நூல் எது?
திருமந்திரம்
20) தினந்தோறும் ஆலயத்தில் நடைபெறுவது!
நித்திய கிரியை

மேலும் வாசிக்க

பொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.

எமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது …