முகப்பு / FrontPicture / குறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்

குறளும் கதையும் 13, நயினை இளந்திரையன்

 

 

 

குறளும் கதையும் 13

நயினை .இளந்திரையன்
அன்று சனிக்கிழமை .மனைவியின் தமக்கையாரின் மகளுடைய பிறந்த தினவிழாவுக்கு போகவேண்டும் என்பதால் ,வேலை முடிந்து சீக்கிரமாகவே வீடுதிரும்பினான். .அவன் வீட்டுக்குள் நுழைந்த போது ,கிளம்புவதற்கு தயாராக நின்றனர் மனைவியும் குழந்தைகளும் .அவன் மனைவி அவனைப் பார்த்து “எப்போதும் நீங்கள் இப்படித்தான் இன்றைக்காவது நேரத்துடன் வரக்கூடாதா?என வினாவவும் ,”இதோ வருகிறேன்” என்றவன் சீக்கிரமே தாயாராகி வந்தான் .
அங்கே ,அவர்கள் சென்றதும் ,உறவினர்கள் ,நணபர்கள் என மண்டபம் நிறைந்து இருந்தது .மணைவி தன உறவினர்களுடன் இணைந்து கொள்ள ,குழந்தைகள் தன் நண்பர்களுடன் இணைந்துகொள்ள ,இவன் தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டான் .அங்கே மேசையில் பலவகை மதுபானங்கள் ,சுவைக்காக பொரியல்கள், நொறுக்கு தீனிகள் ,ஒவ்வொருவர் கைகளிலும் மதுக்கோப்பைகள் ,சம்பிராயத்துக்காக இவனும் மதுவை எடுத்துக்கொண்டான் .பலரும் ஒன்று கூடியதால் அரசியல் ,சினிமா என பல கதைகள் சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கும் போது .அவ்வப்போது ஒருவர் அநாகரியமான முறையில் இரட்டை அர்த்த வார்த்தைகளை கூறி கீழ்த்தரமாக கதைக்கும் போது ,அவருக்கு ஆதரவாக சிலரும் சேர .அவர் மிக தரம் குறைந்து கதைக்கவும் .அதில் இருந்த பண்பானவர்கள் முகம் சுளித்து பெருதும் சங்கடப்பட்டனர்
அந்த நபரின் ,அவரைச்சார்ந்தவர்களின் அநாகரிக நடைமுறையை சகிக்கமுடியாது அவனும் சிலரும் நாகரிகமாக அவ்விடத்தை விட்டு அகன்றனர் .அப்போது மண்டபத்துக்குள் நுழைந்த அவனது நண்பன் அவனைக்கண்டதும் கட்டித்தழுவி நலம் விசாரித்தவன் அந்த அநாகரிகமானவர் சூழ இருந்த மேசையை சுட்டிக்காட்டி “என்னடாப்பா அங்க இல்லாமல் இங்க இருக்கிறாய் ?எனக் கேட்கவும் இவன் “இல்லையடாப்பா அவர்கள் கனி இருக்க காய் கவர்கிறார்கள் “என்றான் .”என்னடாப்பா விடவிடக் கதை சொல்கிறாய் ஒன்றும் விளங்க வில்லை “எனக் கூறியவன் இவனிடம் விடைபெற்று ,அவர்களோடு போய் அமர்ந்து கொண்டான் அவர்களோடு சேர்ந்து மது அருந்தி கூடிக்கதைத்து மகிழ்ந்தவன் .சிறுது நேரத்தில் இவனோடு வந்து அமர்ந்து கொண்டான் .தன்னோடு வந்து அமர்ந்தவனைப் பார்த்து இவன் “என்னடாப்பா!போனவேகத்தில் சீக்கிரமே திரும்பி வந்து என்னோடு அமர்ந்து கொண்டாய் “என்று கேட்கவும் ,அவன் “அவர்கள் என்ன கதை கதைக்கிறார்கள் பண்பாடு தெரியாத வார்த்தைகள் சீச்சீ ……சீச்சீ …..அதுதான் இருக்கப் பிடிக்காமல் வந்து விட்டேன் “என்றான் அதற்கு இவன் “அதுதான் முதலில் நீ போகும்போதே சொன்னேனே கனி இருக்க காய் கவருகிறார்கள் என்று புரியவில்லையா ?”என்றான் அதற்கு அவன் “நீ விடவிட சொல்வாய் விளங்க சொன்னால் தானே “என்றான் “இது நான் சொல்லவில்லையப்பா வள்ளுவர் சொன்னது “எனக்கூறவும் “வள்ளுவரா!அதை விபரமாகத்தான் சொல்லேன் “எனச் சொல்லவும் இவன் பின்வருமாறு சொன்னான்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. குறள் 100:

சாலமன் பாப்பையா உரை:
மனத்திற்கு இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டுத் துன்பம் தரும் சொற்களைக் கூறுவது, நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாகும்.
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இனியவைகூறல்.

குறளும் கதையும் ….12
நயினை இளந்திரையன்
 சனிக்கிழமை காலை எழும்ப மனம் இன்றி ;கட்டிலில் புரண்டு படுக்கிறான். .’எழும்புங்கோ !இன்றைக்கு சாமத்தியவீட்டுக்கு போக வேணும் ‘என்ற மனைவியின் குரல்கேட்டு அலுப்போடு எழுந்து குளியல் அறைக்குப் போகிறான் இகுளித்து முடித்து வந்தவன் தனது அலமாரியில் தனக்கான உடைகளை தெரிவு செய்து கொண்டிருக்கையில் இதனது அலங்காரத்தை முடித்து இகண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துக்கொண்ட அவன் மனைவி
 அவனைப் ப்பார்த்து கேட்டாள் ‘எப்படியப்பா நல்லாய் இருக்கோ ?’என்று இஅவளைபார்காமலே சம்பிராயத்துக்காக ‘அந்தமாதிரி ‘என்றான் ‘பார்க்காமச்சொல்லும் திறமை உங்களுக்கு மட்டும் தான் ‘என்றாள் நக்கலாகமனைவி அவன் ‘இபின்ன இருக்காதா உன்முகம் தெரியாமலே தாலி கட்டிய எனக்கு இது பெரியவிடையமோ’ என்றான் அவள் ‘உங்களுக்கு எப்போதும் நக்கல் .உங்கள் மகள் அடுத்தரூமில் அயமநரி போட்டு முடியவில்லை ‘எனக்கூற குறுக்கிட்ட அவன் ‘பரவாயில்லை விடு ‘என கூற கோபமுடன் அவன் மனைவி ‘ஓம் இஇஇஇஓம் இஇஇஇஇநாங்கள் சொண்டுக்குப் பூசினாலே துண்டைக்காணோம் துணியை காணம் என்பீர்கள் ‘
 என்றாள் அதற்கு அவன் ‘எடியே! மகள் !!நான் வரைந்த ஓவியம் தனிப் பாசம் இருக்காதோ ‘எனச் சொன்னான்
 ‘சரி இஇஇஇஇஇசரி ……வாங்கோ ….’.என அவள் கூறியவாறு இறங்கவும் எல்லோரும் காரில் ஏறி மண்டபம் நோக்கிப் புறப்பட்டனர் .மண்டபமுகப்பு நன்றாக அலங்கரிக்கப் பட்டிருந்தது .உள்மண்டபமும் நன்றாக அலங்கரிக்கப்பட்டு அழகாக இருந்தது அதில் வடவரின் சாயல் தெரிந்ததை மனைவியிடம் அவன் சுட்டிக்காட்ட’ ஊர்வம்பு வேண்டாம் பேசாமல் வாங்கோ’ எனக்கூறவும் அவன் அமைதியாகி தனக்குள் சிரித்துக் கொண்டான் .மேடைக்கு இன்னும் சிறுமி வரவில்லை அவன் ‘நீ இருக்கவிட்டையா? எங்களின் நிகழ்வு இப்படித்தானே ‘என்க்கூறியவாறு மண்டபத்தை நோட்டம் விட்டான் ஒரு மேசையில் குழுமி இருந்த அவனது நண்பர்கள் இவனைப் பார்த்து தம்மருகே வருமாறு கையசைத்து அழைக்கவும் இவனும் சென்று அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டான் மனைவி பிள்ளைகள் பக்கத்து மேசையில் அமர்ந்து கொண்டனர் நண்பர்களுடன் சேர்ந்து வழங்கப்பட்ட பலகாரத்தையும் கொறித்துக்கொண்டு அரசியல்; சினிமா; ஊர்வம்பு என்க்கலகலப்பாக நேரம் போய்கொண்டிருக்க மறுபுறம் மேடையில் சடங்கு சம்பிராயங்கள் நடந்து கொண்டிருந்தன அப்போது ஒலிவாங்கியைப் பிடித்த ஒருவர்’ உணவு தயாராகி விட்டது எழுந்துசென்று உணவு அருந்தலாம்’ எனக் கூறவும் எல்லோரும் ஏழுந்து தட்டை ஏந்திய வாறு வரிசையாக நின்றனர் அவனும் நண்பர்களும் வரிசையில் உணவைப் பெற்றுவந்து மேசையில் அமர்ந்து உணவு அருந்தத் தொடங்கினர் சிறிது நேரத்தில் அவனது குழந்தைகள் தாங்கள் குழைத்து அழைந்து உண்ட உணவின் மிகுதியை கொணர்ந்து தந்தையின் உணவுத் தட்டில் சேர்த்துவிட்டு ‘செல்ல அப்பா ‘என்க்கூறியவாறு வெறும் தட்டுடன் அவ்விடம் விடடு அகன்றனர் இந்நிகழ்வை அவதானித்த; சூழ இருந்த நண்பர்கள் அவனை விநோதமாக பார்த்தனர். அந்த மெ ள னத்தை கலைப்பது போல் ஒருநண்பன் ‘என்னடாப்பா !உன்பிள்ளைகளுக்கு நாகரீகம் தெரியாதோ ?எச்சில் சாப்பாட்டை உன்னிடம் கொட்டிவிட்டுப் போகிறார்கள்’ எனக்கூறவும் எல்லோரும் சிரிக்க ;மற்றொருவன் ‘எனக்கு என்பிள்ளைகள் செய்திருந்தால் நடக்கிறது வேற மனைவிபிள்ளைகளை நம்மட கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் ‘எனக்கூற .வீட்டில் செய்யமுடியாததை வெளியே செய்வதாக சொல்லி பெருமைப் படும் அவன் ஆண் ஆதிக்கத்தை நினைத்து இ வன் தனக்குள் சிரித்துக் கொண்டான் .இன்னொருவன் இதுபற்றி பெரும் விரிவுரையே செய்து தன்னைத்தனே உயர்த்த நினைத்து ;தன்னையே தாழ்த்தி கொண்ட அவன் அறியாமையை கண்டு தனக்குள் சிரித்தான் இமற்றவன்’ இல்லையடாப்பா! வீட்டிலும் இவர் மனைவி பிள்ளைகளின் மிச்சம் தான் சாப்பிடுவார் போல ‘சொல்லி சிரித்த போது அவனது வக்கிரகம் முகத்தில் தெரிவதை கண்டுகொண்டான் ஆனால் ஒருவன் மட்டும் இதில் பங்குபற்றாமல் சாப்பிடுவதிலேயே முழு மூச்சாக இருந்தான் .பாவம் அவர்கள் ஐந்து நாட்களும் வேலை என்பதால் இவீட்டில் குளிர்சாதன பெட்டி பழைய சாப்பாடு தான் தினம் எனவே சந்தர்ப்பத்தை விட மனம் இன்றி உணவு அருந்திக்கொண்டிருந்தான் எல்லோருடைய ஏ ளனைத்தையும் பொறுமையாக ஏற்றுக் கொண்டவன் தற்போது பேசத்தொடங்கி னான்
 ‘நீங்கள் சொல்வது போல் பிள்ளைகளின் மிகுதியை சாப்பிடுவது அசிங்கமும் அல்ல ;அநாகரியமும் அல்ல நீங்கள் சாப்பிட்ட உணவு அறுசுவையாக இருக்கலாம் ஆனால் என்பிள்ளைகள் அழைந்து தந்த உணவு எனக்கு அமுதம் இது உங்களுக்கு புரியாது ஆனால் வள்ளுவர் இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் போய்ப்பாருங்கள் ‘என்றவன் ;அமைதியாக அவர்கள் அறியாமையை எண்ணி சிரித்தவாறு அக்குறளை கூறத் தொடங்கினான்
 குறள் 64
 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
 சிறுகை அளாவிய கூழ்
 மு.வ உரை:
 தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவுஇ பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
 அறத்துப்பால் இல்லறவியல்

குறளும் கதையும் – 11 
 நயினை இஇளந்திரையன்
 மாலைப்பொழுது மெல்லமெல்ல இருள்பரவ ஆரம்பிக்கிறது .ஆற்றோரம் நடந்து வந்த ஐயன் வள்ளுவர் வயல்வெளிகளில் இறங்கி வேகமாக நடக்கிறார் .எப்படியாவது முழுவதும் இருள் சூழமுன் ஊர் மத்தியில் உள்ள சத்திரத்தை அடைந்துவிடவேண்டும் என மனதுக்குள் எண்ணியவாறு ஊரின் பிரதான தெருவில் நுழைகிறார் .குதிரையில் வந்து அரசசேவகர்கள் தெருவிளக்குகளை ஏற்றி விட்டுச்செல்கிரார்கள் வள்ளுவரும் பிரதானதெருவை விட்டு இறங்கி ஊர்மனைகளை ஊடறுத்துச்செல்லும் சிறு ஒழுங்கை யூடாக சத்திரத்தை நோக்கி நடக்கிறார் .குடிசைகளில் விளக்கொளிகள் தெரிகிறது ஊர் அமைதியா கிடந்தாலும் ஓர் குடிசையில் இருந்து மட்டும் ஒர்பெண்ணின் கெஞ்சி அழும் குரலும் அதைத்தொடர்ந்து குழந்தைகள் அழுகுரலும் கேட்கிறது அக்குடிசையருகே சென்று வள்ளுவர் எட்டிப்பார்க்கிறார். குடியானவன் ஒருவன் காவியுடை தரித்து என்னைவிடு நான் போகிறேன் என்கிறான் அப்பெண்ணோ அவன் கால்களைபிடித்துக்கொண்டு என்னையும் குழந்தைகளையும் விட்டுப்போகாதீர்கள் எனக்கெஞ்சுகிறாள் அவன் அவளை எட்டி உதைத்து விட்டு எனக்கு இந்த வாழ்வு பிடிக்கவில்லை இது வாழ்வா ?சண்டை சச்சரவு குழப்பம் வேதனை வறுமை துன்பம் அப்பப்பா ஒன்றா இரண்டா இது வேண்டாம் நான்போய் மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து முத்தியடையப்போகிறேன் என்னைவிடு என கூறியவாறு வெளியேறுகிறான் .இதனைப்பார்த்த வள்ளுவருக்கோ மிகக்கோபம் வந்தது துறவுநோக்கி கிளம்பிவிட்ட அவனை கைகள் தட்டி ஓய் என கூப்பிடுகிறார் அவனும் வள்ளுவரிடம் வந்து என்ன என்று கேட்கவும் வள்ளுவரும் இங்கு நடந்தது எல்லாம் அறிவேன் .வள்ளுவரும் அவனைப்பார்த்து இல்லறத்தின் ஒருபகுதியை சொன்னநீ அதன் பெருமையை உணர்ந்தாயா ?அங்கேதான் அன்பு காதல் தியாகம் பாசம் நேசம் தன்னலம் கருதாமை பக்குவம் புரிந்துணர்வு விட்டுக்கொடுக்கும் புனிதம் என இன்னோரன்ன நற்பண்புகள் உண்டு .இப்பண்புகளை கண்டுகொள்ளாத நீ இதுறவு பூண்டு எதை சாதிக்கப்போகிறாய் துறவறம் சுலபம் என்று நினைப்பது உன் மடமை அலைபாயும் மனத்தை அடக்கி ஐம்புலனை ஒடுக்கி
 தியானத்தில் உன்னால் இருக்கமுடியுமா ?இல்லறத்தை ஒழுங்காக நடத்த முடியாத உன்னால் அது முடியாது .எனப்பல அறிவுரை கூறவும் மனம் திருந்திய குடியானவன் அவரை வணங்கி மணைவி குழந்தைகளை கட்டியணைத்து முத்தம் இட்டான் சிரித்துக்கொண்டே வள்ளுவரும் அவ்விடம் விட்டு அகன்றார் சத்திரம் சென்ற வள்ளுவரும் உறங்கச்சென்றார் அவருக்கு உறக்கம் வரவில்லை அவரது சிந்தனை முழுவதும் அந்தககுடியானவனையே சுற்றிச்சுற்றி வந்தது திடீரென துள்ளி எழுந்த வள்ளுவர் தனது இடுப்பில் இருந்த எழுத்தாணியையும் எட்டையும் எடுத்துக்கொண்டு ;சத்திரவாசலில் எரிந்துகொண்டிருந்த விளக்கருகே சென்று அதன் ஒளியில் குறள் ஒன்றை எழுதிவிட்டு ;உரக்கவாசித்தார் இ
 அக்குறள் இதுதான்
 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
 போஒய்ப் பெறுவ எவன். குறள் 46:
 மனைவியோடு கூடிய வாழ்க்கையை அதற்குரிய இயல்புகளோடு அறவழிகளில் நடத்தினால் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயன்தான் என்ன?.
 குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை.

குறளும் கதையும் – 9

நயினை இளந்திரையன்
 இரவு நான் படுக்கைக்கு தயாராகவும் ;ஓடிவந்து என்னைக்கட்டியனைத்து ;முத்தம் இட்ட என்பிள்ளைகள் ‘அப்பா ……அப்பா ….கதைசொல்லுங்கள் ‘என்றனர் .நானும்’ பாட்டி வடைசுட்ட கதை வேணுமா? நரி அப்பம் பிரித்த கதை சொல்லவா?’ என்றேன்’ இல்லை இல்லை ….. இலக்கியக்கதை இகாவியக்கதை அல்லது தமிழ் புலவர்கதை சொல்லுங்கள்’ என்றனர் .அப்படியா இன்று கும்பகர்ணன் பற்றி சொல்லப்போறேன் எனச்சொல்ல குறுக்கிட்டமகள் ஓ…..இராமாயணமா !எனக்கூற ;மகன் நித்திரைக்கார கும்பகர்ணனா ?என்றான் . ஆமாம் ….  குறுக்கிடக்கூடாது எனக்கூறிகதைசொல்லத்தொடக்கினேன் .

இராவண ராம யுத்தம் நடக்கிறது .நடந்த போரில் இராவணன் தனது வீரம்மிக்க தளபதிகள் மகன் இந்திரசித்து என எல்லோரையும் பறிகொடுத்து நிக்கிறான் .தம்பி லிபீசணன் எதிரி பக்கம் சென்று காட்டிக்கொடுத்ததால் பலம் குறைந்து நிற்கிறான் .நாளையபோருக்கு தலைமை தாங்கி செல்ல தளபதி வேண்டும் சிந்திக்கிறான் அந்தத்தகுதியோடு ஒருவனே இருக்கிறான் அவன் தம்பி கும்பகர்ணன் .ஆனால் அவனோ கேட்டவரத்துக்கு

ஏற்ப நித்திரையில் இருக்கிறான் மந்திரிகளின் ஆலோசனைப்படி அவனை எழுப்பினால்தான் போரை நடத்தமுடிம் என்பதால் அவனை எழுப்பும்படி காவலர்களுக்கு கட்டளை எடுக்கிறான் மன்னன் காவலர்களும்
தாரைதம்பட்டம் சங்கு பறை கொண்டு ஒலி எழுப்புகிறார்கள் அப்போது இப்பாடலைச் சொல்லிச சொல்லி ஒலி எழுப்புகிறார்கள் உறங்குகின்ற கும்பகர்ணா எழுந்திராய் !….எழுந்திராய் !!கறங்கு போல் வில்பிடித்த காததூதர் கையிலே ;உறங்குவாய் !உறங்குவாய்!! இனிக்கிடந்து உறங்குவாய் .
 விழித்து எழுந்த வன் விடயம் அறிந்து போர்க்கோலம் பூண்டு வந்து அண்ணன் இராவணனை சந்திக்கிறான்

‘அண்ணா! இன்னும் சீதையை இராமரிடம் அனுப்பவில்லையா ?எனக்கேட்டான் மன்னன் ‘இல்லை ‘என்கிறான் கும்பகர்ணனும் தமயனிடம் அவளை விடும்படி பலவாறு அறிவுரை சொல்கிறான் அதை காதில் வாங்கிக்கொல்லாத தமையன் தம்பியைப்பார்த்து சொல்கிறான் .’நீயும் உன் தம்பி லிபிசணன் போல் எதிரி பக்கம்சென்று காட்டிக்கொடுத்துஉயிர் வாழுங்கள் நான்இலங்காபுரியின் மானம் காக்க இறுதிவரை போராடுவேன் ‘என பலசுடுவார்த்தைகள் கூறவும் தன் காதுகளைப்பொத்திக்கொண்டு ‘நிறுத்துங்கள் அண்ணா !……நிறுத்துங்கள் .நான் உன் தம்பி லிபுசணன் அல்லன் .இதோ என்னுடல் வளர உயிர் வாழஇந்தவாழ்வு நீதநதது செய்நன்றி மறந்தவன் அல்ல நான் .களம்புகுவேன் எதிரிகள் உயிர்குடிப்பேன் இதோ போகிறேன் ‘
எனக்கிளம்பி திரும்பித்தமையனை கண்கள் கலங்க பாசமுடன் பார்த்துக்கேட்டான் ‘அண்ணா!உன்னை ஆரக்கட்டித்தழுவவேண்டும்போல் ஆசையாக உள்ளது அனுமதிப்பாயா என்றான் .என்னதம்பி இப்படிக்கூறிவிட்டாய் என்க்கூறியவாறு அரியனைவிட்டு ஓடிவந்து ஆரத்தழுவிக்கொண்டான் அண்ணன் ‘போகிறேன் …..அண்ணா ‘என்றான் தம்பி ‘.என்தம்பியே !போய் வருகிறேன் என்று சொல்லப்பா முன்னரெல்லாம் போருக்குகிளம்பும் போது அப்படித்தானே சொல்வாய் இன்றுமட்டும் ஏன் இப்படிநடந்து கொள்கிறாய் ‘என்றான அண்ணன் .அண்ணா !முன்னைய போர்களில் வருவேன் என்று தெரியும் ஆனால் இப்போரில் எனக்குமரணம் என்பது புரியும் இராமபாணம் என் உயிர் குடிக்கும் என்பதும் தெரியும் என்றான் தம்பி கும்பகர்ணன் ..தழுதழுத்த குரலில் கேட்டான் அண்ணன் ‘மரணம் என்றும் தெரிந்துகொண்டும் எனக்காக உயிர் தரத்துணிந்தையே நீயே என் தம்பி ‘என்க்கூறவும் இ’அண்ணா !இவன் என்றும் நன்றி மறவான் ‘என்று பதிலை எதிர்பார்க்காமலே கிளம்பிவிட்டான் கும்பகர்ணன் .தம்பி சென்ற திசையைப்பார்த்தவாறு கலங்காதமாவீரன் இராவணன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது இநாழிகைகள் கடந்தன போர்க்களத்தில் கு ம்பகர்ணன் வீரமரணம் அடைந்த செய்தி கேட்டு இராவணன்’ செஞ்சோறுக்காக உயிர் கொடுத்தாயே ‘என கலங்கி துடித்து அழுதான் 
 கதை கேட்டுக்கொண்டிருந்த என்பிள்ளைகளை பார்த்துகும்பகர்ணனிடம் என்ன நற்பண்பு இருந்தது எனக்கேட்டேன் ஒருமித்தகுரலில் ”செய்நன்றி ”எனஉரக்க சொன்னார்கள் உங்களுக்கு குறள்கள் தெரியும் அல்லவா எங்கே இதற்க்கு பொருத்தமான குரல்சொல்லுங்கள் என்று கேட்க இன்று NநுறுஆழுடுனுநுN தமிழ் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்த குறள் நல்லப் பொருத்தம் எனக்கூறவும்’ என்கேசொல்லுங்கள் பார்ப்போம் ‘என்றேன் இருவரும் உரத்த குரலில்
 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
 வானகமும் ஆற்றல் அரிது. குறள் 101:
 ஒருவருக்கு ஒரு நன்மையும் நாம் செய்யாத போதும்இ அவர் நமக்கு உதவினால்இ அதற்குக் கைம்மாறாக மண்ணுலகையும் விண்ணுலகயும் கொடுத்தாலும் சமம் ஆகாது
 குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்.
 .சத்தம் கேட்டு மேலே வந்த சத்தியாவும் ”என்ன அப்பனும்பிள்ளைகளும் கூத்தும் கும்மாளமும் பக்கத்தில வீடுகள் இருக்குது போய்ப்படுங்கோ என விரட்டவும் பிள்ளைகளும் நக்கலாகசிரித்து கண்சிமிட்டி எனக்கு முத்தம் தந்துவிட்டு படுக்கச்சென்றார்கள்

குறளும் கதையும்-8 

(மாணிக்கப்பரல்கள்)
 கயற்கொடி பட்டொ ளிவீசிப்பறக்க இவலிமைமிக்க அரண்கள் சூழ்ந்த பாண்டியனின் மதுரை கோட்டை; .உள்ளே அத்தாணி மண்டபத்தில் அரியணையில் மன்னன் நெடும்செழியன் ;பக்கத்தே அரசி கோப்பெரும்தேவி இமுன்னே அறிவுசார் மந்திரிகள் புலமைமிக்க சான்றோர் .நாட்டின் நிலைமைகள் பற்றி ஆராய்ந்து கொண்டு இருந்தான் மன்னன் .கோட்டையின் வெளிப்புற வாயிலிலே கொல்லர் உளைக்கலத்துதீ போல் கண்கள்சிவக்க ;விரிகுழல் கூந்தலோடு ;சீறிச்சினத்துடன் வந்தபெண் ‘வாயில்காப்போனே !வயில்காப்போனே !!அறநெறிதவறிய பாண்டியன் வாயில்காப்போனே !!!பரலினையுடைய இரண்டு சிலப்புகளில் ஒன்றைக்கையில் ஏந்தி இநீதி கேட்டு வழக்குரைக்க;வாயிபுறத்தே சினமுடன் ஒருபெண் வந்துள்ளாள் என உன் வேந்தனிடம் சென்று அறிவிப்பாய் என்றாள் .அவ்வாறே அவன் மன்னனிடம் சென்று ‘மன்னா !வாயிற்புறத்தே சினமுடன் கையில்சிலம்போடு ஒரு பெண் வந்துள்ளாள் இவேலினை ஏந்திய கொற்றவையும் அல்ல; காட்டினை ஆளும் காளியும் அல்ல; பிடாரியும் அல்ல; தருகன்மார்பைபிளந்த துர்க்கையும் அல்ல ;அத்தனைபேரின் மொத்தவடிவமாக வந்துள்ளாள்’ என்றான் இ
 ‘அவளை இ ங்கு அழைத்துவா ‘என்றான் மன்னன் .அவளும் அரசனை அணுகிச்சென் றபோது .’என்முன் வந்துநிற்கும் நீ யார் ?என்றான் மன்னன் அதற்கு அப்பெண் ‘ஆராச்சியில்லா மன்னனே கேள் !புறாவின் துயர்தீர்த்த சிபியும் பசுவின் துயர் தீர தன்மகனை தேர் ஏற்றிக் கொன்ற மனுநீதிச்சோ ழ னும் புகழிடையாண்ட பூம்புகார் என் ஊர் .;பெரும்குடிவணிகன் மாசாத்துவான் என் தந்தை இஉன்னால் கொலையுண்ட கோவலன் பத்தினி என் பெயர் கண்ணகி ‘என்றாள்
 ஓ ….அந்தக்கள்வன் மனைவியோ நீ ‘என்றான் மன்னன் உடனே கண்ணகி ‘அடக்குஉன் நாவை ;அடக்கியது என்னவா உயிரை உன் அநீதி ;துடிக்கிறது என் ஆவி ;அதனால் உரைக்கவந்தேன் வழக்கு என்றாள்
கள்வனைக்கொல்வது அரசநீதி என்றான் மன்னன் ‘அறநெறிசெல்லா மன்னா !என்னவர் திருடியதாக பொய்யுரைத்த அச்சிலம்பை கொணர்க சபைக்கு’ என்றாள் காவலர் சிலம்பை கொண்டுவரவும் அதை வாங்கிய கண்ணகி மன்னனைப்பார்த்து ‘உன்சிலம்பின் பரல்கள் என்னவோ ?என்றாள் .’மூச்சடக்கி முத்தெடுத்து; வளம்சேர்க்கும் பாண்டியநாட்டின் முத்துக்களே ;என்சிலம்பின் பரல்கள்’ என்றான் ‘என்சிலம்பின் பரல்கள் மாணி க்கப்பரல்கள் ‘என்றாள் கண்ணகி 
 காவலர்கொண ர்ந்த்சிலம்பை வீசி எறிந்து உடைத்த போது ;அதில் இருந்து மாணிக்கப்ப ரல்கள் சிதறின அதில் ஒன்று மன்னவன் வாயருகே தெறித்து கீழே வீழ்ந்தது
 கண்ணகி விரத்தியுடன் சிரித்தாள் ‘மன்னா !இப்போது சொல் யார் கள்வன் ?நீயா ?என்கணவரா?சொல் மன்னா …..சொல் ..’.என்றாள்
 தெறித்த மாணிக்கப்பரல்கலைக்க்ண்டு திடுக்கிட்ட மன்னன் தன் குற்றவுணர்வினால் கலங்கினான் இ
 வாள்வீசி எதிரிகள் கதைமுடித்த அவன் தடக்கைகள் தளர்ந்தன ;கால்பதித்த இடமெல்லாம் களம்கண்டு வாகைசூடிய கால்கைகள் சோர்ந்தன ;பிளிறிவரும் யானைக்கும் அஞ்சாது நேர் நின்று வேல்கொண்டு வீழ்த்திய வீரன் கண்ணகியின் வார்த்தையின் வேல் பட்டு நெஞ்சம் புண்பட்டு நின்றான் இஅவன் சூடிய வேப்பமாலை கருகி வீழ்ந்தது பொன்செய் கொல்லன் பொய்யுரை கோட்டு மெய்யறிவு காணாது நீதிதவறிய யானோ அரசன் ?இல்லை …..இல்லை இகோவலன் சிலம்பை என்னுடை யதாக்கிய நானே கள்வன் என்முன்னோர்க்கும் பின்னோர்க்கும் பழி தேடி விட்டேனே என்க்கலங்கியவன் வள்ளுவர் வழி மெய்ப்பொருள் கண்டிருந்தால் பழி வந்திராதே எனக்கூறி ‘கெடுக என் ஆயுள் ‘என்று மயங்கி வீழ்ந்து மடிந்தான் .தென்னவன் கற்பரசி கோப்பெரும்தேவியும் மன்னன் உடல்மீது மயங்கிவீழ்ந்து மாண்டாள் ‘கோபம்தணியாத கண்ணகி ‘தன்முலைதிருகி மதுரையை எரிப்பேன் ‘என அவ்விடம் விட்டகன்றாள் .மந்திரிகளும் புலவர்களும் மன்னவன் உடலருகே சோகமேயுருவாக நின்றபோது ;காவலன் ஒருவன் அவர்களைப்பார்த்துக்கேட்டான் ‘மன்னன் மரணத்தருவாயில் வள்ளுவர் மெய்பொருள் கண்டிருந்தால் பழி வந்திராதே என்றார் .அதன் பொருள் என்னவோ?’ எனக்கேட்கவும் அங்கிருந்த புலவர் சொன்னார்’ வள்ளுவர் தனது திருக்குறளிலே
 இவ்வாறு கூறுகிறார்
 எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
 மெய்ப்பொருள் காண்ப தறிவு. குறள் 423:
 ‘அதன் பொருள் என்னவோ ‘காவலன் கேட்டான்
 எப்பொருளை யார் யார் இடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப் பொருளின் மெய்யானப் பொருளைக் காண்பதே அறிவாகும்.
 பொருட்பால் – அரசியல் – அறிவுடைமை
 நயினை .இளந்திரையன்

குறளும் கதையும் -7
 நயினை .இளந்திரையன்
பகலும் இரவும் கைகுலுக்கும் அந்திபொழுது பறங்கிமலை நந்தவனத்தில் மன்னன் பாரி அமைச்சருடன் உலாவருகிறான் திடீரென அமைச்சரை நோக்கி ‘அமைச்சரே இன்று என் குழைந்தைகள் அங்கவை சங்கவையோடு பறந்கிமலையின் புறநகர் சென்று இம்மாலைப் பொழுதை இனிமையாக களிக்க விருப்புகின்றேன் தேரைத்தயார்படுத்தும் ‘எனக்கட்டளையிட்டவாறு தன் மக்களை அழைத்தான் மன்னன் தந்தையின் குரல் கேட்டு ஓடிவந்த மக்களிடம் தனது விருப்பத்தை கூறவும் அவர்கள் துள்ளிக்குதித்து தந்தையை கட்டியணைத்து முத்தமழை பொழிந்து தேரேறி புறப்பட்டனர் வீதியில் மன்னனைக்கண்டமக்கள் வணங்கிவாழ்த்த அன்போடு அவர்கள் நலம் அறிந்து புறநகரின் பசுமைநிறைந்த இடத்தை சென்றடைந்தார்கள்
 சலசலத்தோடும் ஆறு பாய்ந்து விழும் நீரருவி ம்லர்தாவிமலர்தாவி தேனெடுக்கும் பட்டாம்பூச்சி மலைதழுவி வீசும் மாலைதென்றல் அத்தனையும் கண்டு மனம்களிகொண்டு தேர் விட்டு இறங்கி துள்ளிக்குதித்து பசுந்தரை எங்கும் ஆடிபாடி ஓடி மகிழ்ந்தனர் அங்கவையும் சங்கவையும்.அவர்கள் கால் சலங்கையொலி கேட்ட புல் மேந்த சிறுமுயல்கள் தங்கள் வளையருகே ஓடிச்சென்று தலையுயர்த்தி செவிநிமிர்த்திப்பார்த்தன புள்ளிமான்கள் மருண்டவிழி யோடு மிரண்டு நின்றன கோலமயில்கள் தோகைவிரித்து ஆடிமகிழ்ந்தன கிளைதாவிக்கிளைதாவி வானரங்கள் குதித்தாட சிலகுரங்கு மயில்முட்டை கொண்டு பூப்பந்து விளையாட அதுகண்டு அங்கவையும்சங்கவையும் கூக்காட்ட ஆரக்கிளிக்கூட்டம் மொழிபேச அப்பப்பா …அப்பப்பா …எழுத்தில் தீட்டமுடியவிலை அக்காட்சிதனை .
 தந்தையைப்பார்த்து கேட்டனர் ‘தந்தையே :சிறுதூரம் ஆற்றோரம் நடைபயின்று வருவோமா ?என்று அப்படியே ஆகட்டும் என்று குழந்தைகள் முன்செல்ல மன்னன் பின்சென்றான் .துள்ளிக்குதித்து முன் சென்ற குழைந்தைகள் ஓர் இடத்தில் நின்று ‘இதோ பாருங்கள் தந்தையே’ எனக்கூக்குரல் இட்டனர் மன்னனும் ஓடிச்சென்று பார்த்தான் கொழுக்கொம்பு அற்று முல்லைச்செடியொன்று நிலத்தில் வாடிக்கிடந்தது .திகைத்தான் துடித்தான் ‘யார் இந்தப்பாத கத்தை செய்தது ‘எனப்புலம்பினான் முல்லைச்செடி படர்ந்த மரத்தை
 வெட்டிச்சென்றவர் யாரோ? ஐயகோ! என்செய்வேன் !’எனப்புலம்பியவாறு கொடியைதன்மடியில் கிடத்தித்தடவிக்கொடுத்தான் தீடீரென முகல்மலர எழுந்தான் தேர்ப்பாகனை நோக்கி ‘குதிரைகளை கட்டவிழுத்து இட்டுவா தேரை இங்கே ‘என்றான் முல்லைக்கொடியருகே நிறுத்தி தேர்மீது கொடியைப்படரவிட்டான் வாடிக்கிடந்தகொடி காற்றில் இலை யசைத்து நன்றிசொல்ல தடவிக்கொடுத்த மன்னன் பிள்ளைகளைப்பார்த்து ‘வாருங்கள் நடந்தே அரண்மனை போகலாம் ‘எனக்கூறி த்திரும்பவும் எதிரே ஓ ளவையாரும் ஐயன் வள்ளுவரும் வருவதைக்கண்டு மனம் மகிழ்வுகொண்டு கரம்கூப்பி ‘வரவேண்டும் வரவேண்டும் தங்கள் திருவடி பட்டதால் பறங்கிமலைஇன்று பெரும்பேறு பெற்றது மக்களைப்பார்த்து ‘குழந்தைகளே இவர்கள் திருவடி தொட்டு வணங்குங்கள் ‘என்றான் அவர்களும் அவ்வாறுசெய்தனர் மன்னனையும் மக்களையும் வாழ்த்திய புலவர்கள் ‘என்ன மன்னா உலாவந்தீர்களோ ?
 ஆமாம் …..ஆமாம் என்றான் மன்னன்
எங்கே தேரைக்கானவிலை ..நடந்தா?வந்தீர்கள் ?என்றார் பாட்டி
 இல்லை …..இல்லை …என முல்லைக்கொடியைப்பார்த்து சிரித்தான் மன்னன்
 முல்லைக்கொடியையும் தேரையும் வெட்டுன்ன்ட மரத்தையும் கண்ட தமிழ் மூதாட்டி க்கு எல்லாம் புரிந்தது கையுயர்த்தி மன்னனை வாழ்த்தி ‘முல்லைக்கு தேர் கொடுத்த மன்னா நீ வாழ்க! உன் நிலம் வாழ்க !!உன் புகழ் வாழ்க!!! என் வாழ்த்தியவாறு வள்ளுவரைப்பார்த்து புன்முறுவல் செய்தார் .வள்ளுவரும் ‘பாரி மன்னா! உன் அன்போ அன்பு உன் இசசெயல் கண்டு மனம் மகிழ்ந்து உனக்காகவே ஓர் குறள் எழுதினேன் கேட்டுப்பார்’ எனக்கூறி உரக்கவாசித்தார்
‘அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
 என்பும் உரியர் பிறர்க்கு’
 ‘இதன் கருத்து என்னவோ ?’அங்கவையும் சங்கவையும் கேட்டனர்
 ‘அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.’என்றார் வள்ளுவர்
 குறள் 72:
 அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
 என்பும் உரியர் பிறர்க்கு.
 குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை(காலவழுவுக்கு மன்னிக்கவும்

 

 

குறளும் கதையும் ……6
 நயினை .இளந்திரையன்
 நேசனும் ராசனும் நீண்டகால நண்பர்கள் முற்றத்தில் விரலால் அகரம் எழுதிய நாள் முதல் இபள்ளி சென்றது பல்கலைக்கழகம் சென்று நிலம் விட்டு புலம் வந்து இன்று இல்லறத்துள் நுழைந்து வாழ்ந்தாலும் இஇன்றுவரை தொடரும் இனிய நட்பு அவர்களுடையது .நேசன் பெயருக்கு ஏற்ப நேசம் பாசம் கொண்ட நேர்மையான ஆர்பாட்டம் இல்லாத அமைதியானவன் அவன் மனைவி மதியும் மதிநுட்பம் மிக்க அன்பாக் பழகும் சிக்கனம் மிகுந்த பெண் நேசன் தனியார் நிறுவனத்தில் வேலை இமதியோ அங்காடி ஒன்றில் காசாளராக வேலை .வரவுக்கு ஏற்ப சிக்கனமாக வாழ்க்கையை நடத்தினர் .ராசன் கலகலப்பானவன் சுறுசுறுப்பும் துடிப்பும் மிக்கவன் சோராத உழைப்பாளி .தனது முயற்சியினால் சொந்தமாகவே பலசரக்கு கடையை நடத்தி வந்தான் .அவன் மனைவி புவனா ஆடப்பர அலங்கார பிரியை .செலவாளி மற்றவர் தன்னை உயர்த்திக் காட்டிட தாராளமாக செலவு செய்தாள் கணவன் ராசனும் அவளது பெற்றோரும் அறிவுரைகளை சொன்னபோதும் செவிசாய்த்ததாக தெரியவில்லை ராசனும் தனது நம்பிக்கையை இழந்து வருவதை எதிர் கொள்வோம் என விட்டுவிட்டான் காலங்கள் கடந்தன
நீண்ட நாட்கள் நண்பர்கள் சந்தித்து பேசி மகிழவில்லை என்பதால் ராசன் நேசன் குடும்பத்தினரை ஓர் கோடை விடுமுறைக்கு பகல் விருந்துக்கு அழைத்தான் நேசனும் மனமகிழ்வோடு அவன் அழைப்பை ஏற்று குடும்பத்துடன் சென்றிருந்தான் அங்கே சந்தித்த இரு குடும்ப சிறார்களும் மகிழ்வோடு பின் தோட்டத்தில் விளையாட நண்பர்களும் அவர் தம் மணைவியும் மதியின் பெற்றோரும் கூடிக்கதைத்துக் கொண்டிருந்தபோது அழைப்பு மணிச்சத்தம் கேட்க்கவும் இபுவனா சென்று கதவை திறந்து பார்த்துவிட்டு இதன கணவர் ராசனிடம் ‘யாரோ இரு வெள்ளைகள் வந்திருக்கிறார்கள் போய் பாருங்கோ ‘எனச்சொன்னாள் அவன் சென்று கதைத்த சிறிய நேரத்தில் ராசன் உரத்த குரலில் வாக்குவாதப் படுவதை கேட்ட ஏனையோர் எழுந்து சென்று என்ன என் விசாரித்தனர் .’கடன் அட்டை தவணைப் பணம் கட்டத் தவறியதால் .நீதிமன்ற ஆணைப்படி பொருட்களை தூக்க வந்திருப்பதாகவும் குறிப்பிட்ட பணத்தை தற்போது கட்டினால் தாங்கள் திரும்புவதாகவும் கூறுவதாக ‘ராசன் கூற இகுறுக்கிட்ட நேசன் ‘கடன் அட்டைப்பணம் எவ்வளவு ?எதற்க்காக எடுத்தீர்கள்?’ என வினாவ ராசன் தன மனைவி புவனாவைப் பார்க்க இஅவள் தலை குனிந்து நிற்க இஅவள்ளருகே நின்ற அவளது தந்தை மகளை பார்த்து ‘எல்லாம் இவளாள் வந்தது கடன் அட்டையை கண்டபடி அநாவசியமாக செலவு செய்திருப்பாள் இப்ப தெரியுது அல்லோ! எனத் தொடர குறுக்கிட்ட நேசனின் மனைவி ‘இப்போ அதெல்லாம் கதைக்கவேண்டாம் எவ்வளவு என்று கேளுங்கோ.
 கட்டப்பணம் இருக்கோ ராசண்ணா ?எனக்கேட்க இல்லை என அவன் தலை அசைக்க மதி தன கணவனிடம் ‘அவர்களிடம் இன்னும் அரை மணித்தியாலயம் கேளுங்கோ நான் வீட்ட போய் பணத்துடன் வருகிறேன் ‘.
என கணவரிடம் கார் திறப்பை வாங்கி வெளியேறினாள் .வந்தவர்களும் அரைமணிதியாலம் பொறுப்பதாக சொன்னார்கள் நேசனுக்கு ஒரே சிந்தனை இவளுக்கு எப்படிப்பணம் ?குடுப்பம் நடத்தவே பணம் போதாது எங்கிருந்து?.சிந்தனை குழம்பி நிற்கையில் இபோனவேகத்தில் விரைந்து திரும்பி வந்தவள் பணத்தை ராசனிடம் கொடுத்தாள் அதை அவன் வந்தவர்களிடம் கொடுக்க .பெற்றுக்கொண்டு அவர்கள் போக பிரச்சனை சுமூகமாக முடிந்தது எல்லோரும் பழைய நிலைக்கு வர இதன மனைவியை பார்த்து நேசன் ‘உனக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது? ‘எனக்கேட்டான் .இது எனது சேமிப்பு பணம்’ என்றாள்மதி . புவனாவின் தந்தை ஓர் தமிழ் பண்டிதர் அவர்நேசனைப் பார்த்து ‘நேசன் !இப்படி ஓர் மணைவி கிடைத்தமை உன் தவம் மதியை பார்க்க எனக்கு வள்ளுவர் குறள் தான் நினைவுக்கு வருகிறது சொல்கிறேன் கேளுங்கள் ‘என்ச் சொல்லத் தொடங்கினார் 
 குறள் 51:
 மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
 வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
 மு.வ உரை:
 இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

குறளும் கதையும் …….5
 நயினை இஇளந்திரையன்
கட்டிலில் நித்திரை விழித்த நான் எதிரே சுவர்க்கடிகாரத்தைப் பார்க்கிறேன் .காலை எழுமணி.எட்டி கைகளால் யன்னல் திரைச்சீலையை நீக்கிப்பார்க்கிறேன் வெளியே குளிர்காலமாகையால் இருட்டாகவே இருந்தது விடுமுறை நாள் என்பதால் மனைவியும் மக்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்கள் .படுக்கையில் இருந்து எழும்பாமல உறங்கம்கொள்ளாமல் கண்களை மூடி உடலை இலேசாக்கி கற்பனைகளை சிறகடிக்கவிட்டு துயிலும் சுகம் இருக்கே அப்பப்பப்பப்பா.,, அதுவொரு தனிச் சுகம் அந்தச்சுகத்தை அனுபவித்துக் கொண்டே சிறிது கண் விழிக்கிறேன் வீட்டின் எதிர்ச் சுவரில் புத்தரின் தியானப்படம் கண்களில் படுகிறது அவரை உற்றுப்பார்க்கிறேன் .நிட்டையுடன்கூடிய அவர் முகம் அம்முகத்தில் தெரியும் சாந்தம் அமைதி அழகு ஆர்பரித்த கடல் அமைதியாக கிடப்பது போல் ஆர்பரிக்கும் மனிதக்கடலில் அமைதியாகக் கிடக்கும் அவர் மனிதம் இஅவரை பார்த்தவாறே அமைதியான மனதுடன் உறங்கிப்போகிறேன்
————————————————————————————————————————————-
காலைகதிரவன் கதிர்பட்டு இரவு புல்லோடும் இலையோடும் உறவாடிமகிழ்ந்த பனித்துளிகள் விடைகொள்ள ;மெல்லமெல்ல சூடான இளம் கதிர்கள் பரவும் காலைப்பொழுது இகெள தம புத்தரும் தியானம் முடித்து போதனை செய்வதற்காக அடுத்த கிராமம் நோக்கி போய்க்கொண்டிருக்கிறார் அவர்முன்னே சிலர் ஆட்டுமந்தைகளை ஓட்டிக்கொண்டுசென்றார்கள் இசில ஆடுகள் தெ ருக்கரைகளில் கண்ட புற்களையும் செடிகளையும் பசியோடு மேயப்போக .அவற்றை மேய விடாது அவர்கள் விரட்டினர் ஆடுகளும் தளராது மீண்டும் மீண்டும் முயற்சி செய்தபோதும் அவர்களும் அவற்றை மேய விடாது விரட்டினர் இதுகண்டு புத்தரும் மனம் நொந்து இரங்கினார் அத்தோடு என்னோர் காட்சியும் அவர் கண்டார்
 அந்தமந்தை கூட்டத்தில் ஓர் நொண்டி ஆட்டுக்குட்டி மற்றையஆடுகளுக்கு ஈடுகொடுத்து நடக்கமுடியாது நடந்தமையினால் மற்றைய ஆடுகளை விட மிகப் பின்னால் நிற்கவும் அதை இடையர்கள் அடித்து முன் விரட்டவும் தாய் ஆடு அதை தேடி பின்னோக்கி வர இடையர் அதை அடித்து விரட்டவும் ;அது பயந்து மந்தைகளுக்கு இடையே ஓடி குட்டி ஆட்டை நோக்கி பயத்தோடும் இரக்கத்தோடும் குரல் கொடுத்து அழைப்பதும் ;குட்டியாடு ஏக்கமுடன் எதிர் குரல் கொடுப்பதும் அங்கே ஓர் பாசப் போராட்டம் நடப்பதைக் கண்ட புத்தர் மனம் துடித்துப் போனார் .அம்படிபட்ட புறாவுக்காக மனம் துடித்தவர் அல்லவா அவர் ஓடிச்சென்று நொண்டி ஆட்டுக்குட்டியை அன்போடு அனைத்து தூக்கி தன தோளிலே சுமந்து நடந்தார் துறவியின் இச்செயலைக் கண்ட இடையர்கள் எதுவும் பேசாது பின் தொடர்ந்தனர் புத்தர் இடையர்களை பார்த்து ‘இவற்றை எங்கு ஒட்டிச் செல்லுகிறீர்கள் ‘என்றார் அவர்கள் ‘பிம்பிராசாவின் அரண்மனைக்கு ஓட்டிச்செல்கிறோம் .அவர் பெரும் யாகம் செய்கிறார் அந்த யாகத்தில் இவற்றைப் பலியிடப் போகிறார் அதற்காகவே ஓட்டிச்செல்கிறோம் ‘என்றனர் புத்தரும் ஆச்சரியத்துடன் ‘என்ன கொடுமை இது ‘பலியிடப்போகிறிர்களா ?நானே வந்து உங்கள் மன்னனை சந்திக்கிறேன் ‘என்று அவர்களுடன் சென்றார்
 அங்கு சென்ற புத்தர் ஒருமுறை சுற்றி நோட்டம் விட்டார் பெரும் யாககுன்டங்கள் அதில் தீ பெருதாக கொழுந்து கள் விட்டு வானாளாவி எரிந்தது .அவிபாகங்களை கொட்டிக் கொட்டி நெய் விட்டு தூண்டினார்கள்
 புரோகிதர்கள் அவர்கள் மந்திர ஒலிகள் இசையோடு ஓலிக்கப்பட்டது மன்னன் மேடைமேல் இருந்து இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தான் புத்தரைக் கண்ட புரோகிதர்களுக்கு மனக்கலக்கம் ஆனால் காட்டிக்கொள்ளவில்லை
 புத்தரும் மன்னன் முன் போய் நின்றார் வந்திருப்பது யாரென்று அறிந்த மன்னன் ஆசனம் காட்டி அமரும் படி வேண்டினான் புத்தரும் ‘ஆசனம் தேடி வரவில்லை உனக்கு அறிவுரை சொல்லி அன்பு புகட்ட வந்தேன் ‘என்றார் மன்னன் புத்தரை பார்த்தான் ஏனெனில் புத்தரும் அவன் இனம் அல்லவா (அரசபரம்பரை )அரசசுகபோகங்களுடன் வாழவேண்டிய சக்கரவர்த்தி எல்லாம் துறந்து அவன் முன் துறவியாக நிற்பது கண்டு விய ந்தான் அவர்மேல் மன்னனுக்கு இனம் புரியாத பக்தியும் மதிப்பும் ஏற்பட்டது புத்தர அவனைப்பார்த்து’.இங்கு என்ன நடக்கிறது ?’எனக்கேட்டார் ‘யாகம் நடக்கிறது ‘சாதாரணமாக மன்னன் பதில் சொன்னான் ‘எதற்காக ஆடுகளை கொணர்ந்து உள்ளாய் ‘புத்தர் கேட்டார் ‘பலியிடப்போகிறேன் ‘என்றான் மன்னன்’ அவற்றை பலியிட்டு யாகம் செய்வதால் நீ அடையும் பலன் ஏது’ என்றார்புத்தர் மன்னன் ‘அவற்றைப்பலி கொடுத்து யாகம் செய்தால்கடவுள் மகிழ்ந்து நாடு வளம்பெறும் எனக்கு நீண்ட ஆயுள் புகழ் எனப்பல பேறு கிடைக்கும் ‘என்றான் புத்தர் சிரித்துக் கொண்டே ‘பிள்ளைகளை கொன்று கறி சமைத்துக் கொடுத்தால் எந்த தாயும் மகிழ்வாரோ ?ஏற்றுக் கொள்வாரோ ?அதுபோன்றே நீ வணங்கும் இறைவனும் ‘என பல அறிவுரை கள் சொன்னவர் தொடர்ந்து ‘ பலியிடுவது தான் உனது மு டிவு என்றால் முதலில் என்னைப் பலியிடுஇ அதன் பின் அவற்றைப் பலியிடு ‘எனக்கூறியவர் பலியிடும் இடத்தில் போய் தயாராக நின்றார் திகைத்த மன்னவன் மனம் திருந்தி தன தவற்றை உணர்ந்து இமன்னிப்புக் கேட்டு பலியிடுவதை நிறுத்துமாறு கட்டளை இட்டான் புத்தரும் மகிழ்ந்து அவனை வாழ்த்தி விடை பெற்றார்
 இவற்றை பார்த்த நான் மகிழ்ந்து கைதட்டி அராவாரத்துடன் ‘சபாஸ் புத்தபெருமனே !இதைத்தான் எங்கள் வள்ளுவரும் இப்படி சென்னார்
 குறள் 328:
 நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
 கொன்றாகும் ஆக்கங் கடை.
 சாலமன் பாப்பையா உரை:
 வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும்இ செல்வம் பெருகும் என்றாலும்இ பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.
 குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கொல்லாமை.
 என்று கூறவும் என்னைத் தட்டி எழுப்பிய மனைவி ‘என்னப்பா இஇஇஇகனவா கண்டீர்கள் ?இப்படிப் பிதற்றுகிறீர்கள் காலையிலும் கனவா?’என்றாள் திடீரென விழித்த நான் உண்மையைப் புரிந்து கொண்டு இசிரித்துக் கொண்டே ‘ஆம் கனவுதான் ஆனால் அர்த்தம் உள்ள கனவு ‘எனக்கூறி என்னையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு இகுளியல் அறை நோக்கி விரைந்தேன்

குறளும் கதையும் 4,  நயினை ,இளந்திரையன் 

இரப்போர் இல்லாது உழைப்போர் வாழும்பூமி, .வீரம் நிறைந்த தமிழ் மானம் காக்கும் பூமி .நஞசையும் புஞ்சையும் நிறைந்து இயற்கை எழில் கொஞ்சும் வளம் நிறைந்த பூமி .என்ன வளம் அங்கு இல்லையென மற்றோர் போற்றும் பூமி அது தான் வளம் நிறைந்த வன்னி நிலம் .அந்த நிலத்தை மாசற்ற மன்னனாக ,நீதி வழுவாது ஆட்சி செய்தான் குலசேகர வைரமுத்து பண்டாரவன்னியன். சோழர் இலங்கையை கைப்பற்றிய போது அவர்கள் தளபதிகளாக வடதமிழகத்தில் இருந்து வந்த வீரமிக்க வன்னியர் குலவாரிசு பண்டாரவன்னியன் .இவனுக்கு கைலாயவன்னியன் ,பெரியமைனர் என இரு சகோதரரும் நல்லநாச்சியார் என்ற சகோதரியும் இருந்தனர் ,இலங்கைக்கு முதல் வந்த அன்னியரான போர்த்துக்கேயர் இவனுக்கு எதிராக போர் தொடுத்த போதும் இவனது வீரம்; போர்த்தந்திரம்; நாட்டுப்பற்று காரணமாக வன்னியை வெல்லமுடியாமலே வெளியேறுகின்றனர். .பின்வந்த ஒல்லாந்தர் பிரித்தானிய க்கு எதிராகவும் வீரமுடன் போராடினான் வன்னியில் கற்பூரப் புல்வெளிப் போரும் முல்லைத்தீவில் வெள்ளையர் கோட்டையை நிர்மூலம்மாக்கி பீரங்கியை கைபற்றியது இவனது வரலாற்றுப் பதிவாகும் போரினால் இவனை வெல்லமுடியாது திகைத்த னர் வெள்ளையர்கள் சதியினால் தான் வெல்லமுடியும் என்த்தீர்மானித்து வன்னியின் இன்னோர் குறுநில மன்னனான் கக்கைவன்னியனை நாடுகிறார்கள் ,முன்னர் காக்கைவன்னியன் பண்டாரவன்னியன் தங்கை நல்லநாச்சியார் மீது மோகம் கொண்டு ,பெண்கேட்டு பண்டாரவன்னியனிடம் தூது அனுப்புகிறான் ஆனால் நல்லநாச்சியாரோ தனக்குபாடம் புகட்டிய புலவர் மீது காதல் கொள்கிறாள் தங்கையின் நிலையறிந்த அண்ணன் பண்டாரவன்னியன் ;காக்கைவன்னியன் தூதை நிராகரிக்கிறான் ,பெண் கேட்டு மனம் புண்பட்ட காக்கைவன்னியன் சந்தர ப்பம் பார்த்து பண்டாரவன்னியனுக்கு எதிராக வெள்ளையருடன் கூட்டுச்சேரு கிறான் கூட்டுச்சேர்ந்து ம் பண்டாரவன்னியனை வெல்லமுடியாத தாதால் .வெள்ளையரின் புதிய சதிக்கு உடன் பட்டு ;பண்டாரவன்னியனுக்கு காக்கைவன்னியன ,தான் திருந்தி விட்டதாகவும் ,வெள்ளையரை எதிர்க்கப் போவதாகவும் அதற்கு உனது நட்பும் உதவியும் தேவையென நயவன்சகத்துடன் தூது விடுகிறான் அதை நம்பினான் பண்டாரவன்னியன் .
******** ********* ********* ********** ************* ****************** ****************
வன்னியில் பண்டாரவன்னியன் கோட்டை அங்கே கொலு மண்டபத்தில் அரசன் முன்னே அமைச்சரும் தம்பியுமான கைலாயவன்னியன் ,மற்றைய தம்பி தளபதி பெரியமைனர், .மைத்துனர் புலவர் இவர்களுடன் ஏனையோரும் சூழ்ந்திருக்க; அவர்களுக்கு காக்கைவன்னியன் அனுப்பிய தூது பற்றி விளக்கி ;அவனைச் சேர்த்துக் கொள்ளப்போவதாக கூறுகிறான் பண்டாரவன்னியன் ,உடனே துடித்து எழுந்த தம்பி கைலாயவன்னியன் “அண்ணா !அவனை நம்பவேணாம் .நரிக்குனமும் பாம்பின் நஞ்சும் கொண்டவன் “எனக்கூற .பெரிய மைனர் “ஆமாம் ,அண்ணா !சகோதரர் சொல்வது உண்மையே .அவன் வெள் ளையர்களுடன் சேர்ந்து சதி செய்கிறான் ஒற்றர்கள் மூலம் அறிந்தேன் “எனக்கூற மைத்துனரான புலவர் எழுந்து “இவர்கள் சொல்வது முற்றிலும் உண்மையே .வள்ளுவர் சொல்வது போல் கூடாநட்பு வேண்டாம் “எனப்பல அறிவுரைகள் சொல்லவும் ,மன்னன் “தங்கள் அறிவுரையில் உண்மைகள் உள்ளது நான் அறிவேன் 
நம்மிடம் வீரமும் நீதியும் உள்ளது அத்தோடு அவன் நன்மவன் ;நம் இனத்தவன்; நமக்குள் மூன்றாம் நபரான வெள்ளையன் வரக்கூடாது;நட்பு வேண்டி அழைக்கும் போது ,அவமதிப்பது நம் மரபன்று ; மறப்போம் மன்னிப்போம் நாமும் அவதானமுடன் இருப்போம் “எனக்கூறவும் வாயில் காப்போன் வந்து காக்கைவன்னியன் வந்திருப்பதாக கூறவும் “வரச்சொல் “என்றான் மன்னன் சபைக்கு வந்த காக்கைவன்னியன் வணக்கம் சொன்னவன் மன்னனைப்பார்த்து குனிந்து ;வளைந்து; நெளிந்து வணக்கம் சொல்லவும் அதைப்பார்த்த புலவர் மைத்துனர் கைலாயவன்னியன் காதில் மெதுவாக “இவன் ஆபத்தானவன் நாம் அவதானமாக இருக்கவேண்டும் மன்னனுக்குப் புரியவில்லை ஒருவன் நேர்படக் கூறி ,கோபப்படும் நபராக இருந்தால் அவன் நெஞ்சில் எதுவும் இல்லை ,இவனைப் போல் நெளிந்து வளைந்து அமைதியாக அடக்கமாக இருந்தால் அவர்கள் மிக ஆபத்தானவன் “எனக்கூறினார் 
நட்போடு வந்த நயவஞ்சகன் காக்கைவன்னியன் ,காலம் வரும்வரை காத்திருந்தான். வஞ்சகன் காக்கைவன்னியன் என அறியாது ; நண்பன் என்றே நம்பி நடந்தான் பண்டாரன்னியன் ,வெள்ளையனுடன் கூடி செய்தசதி நிறைவேறும் சந்தர்ப்பம் வந்தது ,ஒருவாறு கதை சொல்லி ;பண்டாரவன்னியனை நப்பவைத்து ;தனிமைப்படுத்தி ;ஓட்டிசுட் டானுக்கு கூட்டிச்சென்று ;கற்சிலைமடுவில் வெள்ளையரிடம் மன்னனை சிக்கவைத்தான்துரோகி காக்கைவன்னியன் ,அப்போது தான் தனது தவறை உணர்ந்து வேதனை கொண்டான் மன்னன் ( பண்டாரவன்னியன் வீரமரணம் அடைந்தானா ?சிறைபிடிக்கப்பட்டானா எப்படிமரணம் அடைந்தான் என்பது என் அறிவுக்கு எட்டியவரை மர்மமாக வே இருப்பதாகவே எண்ணுகிறேன் கற்சிலைமடுவில் அவர து நடுகைக்கல்உள்ளது இக்கதைக்காக அவர் சிறைப்பிடிக்கப்பட்டதாகவே வைத்து எழுதுகிறேன்மன்னிக்கவும் )(ஏனோ தெரியவில்லை வன்னிமண்ணின் வீரம் சதிகளால் முறியடிக்கப்படுவது வரலாறாகவே வருகிறது )
மன்னன் நயவன்சகமாக சிறைப்பிடிக்கப்பட்டு ;சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வெள்ளை யன் முன் நிறுத்தபடுகிறான் அங்கே வெள்ளையர் முன் நெளிந்து வளைந்து குழைந்து சிரித்துக் கொண்டு காக்கைவன்னியன் நிற்கிறான் ,அவனைக்கண்டு மன்னனுக்கு கோபம் வரவில்லைதம்பிமாரும் புலவரும் சொன்னதை கேட்டு நடக்காத தனது தவறை உணர்கிறான் அப்போது அவனுக்கு அன்றுகொலுமண்டபத்திலே மைத்துனர் புலவர் சொன்ன குறள் நினைவுக்கு வந்தது .

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. குறள் 821:

சாலமன் பாப்பையா உரை:
மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பழகுபவரின் நட்பானது, பொருளைத் தாங்குவதுபோல் தோன்றினாலும் பொருளை வெட்டி எறிவதற்குத் துணை செய்யும் பட்டடை போன்றது.
பொருட்பால் – நட்பியல் – கூடாநட்பு

 

குறளும் கதையும் 3
நயினை ,இளந்திரையன்
குமணனும் புலவரும்
மன்னன் குமணன் ஈகையும் அன்பும் நிறைந்தவன் .தனது நாட்டை நீதி வழுவாது ஆட்சி செய்தான் .மக்கள் எல்லோரும் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர் இதுகண்டு பொறுக்காது தானே அரசு ஆளவேண்டும் என ஆசை கொண்டு அவன் தம்பி இளங்குமரன் நயவன்சகமாக சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றி .நாட்டை விட்டு விரட்டுகிறான் .முடியிழந்து ,நாடிழந்த ,மன்னன் காட்டை தஞ்சம் அடைகிறான் இது இவ்வாறு இருக்க .ஏதும அறியா தமிழ் புலவர் மன்னன் குமணனைக் கண்டு தன நிலை சொல்லி பாட்டெழுதி பரிசு பெற்று தன வறுமை போக்கலாம் என அவன் அரமணை போகிறார் ,அங்கே வாயில் காப்போர் மூலம் மன்னன் குமணனுக்கு ஏற்பட்ட நிலையறிந்து துடித்துப் போனார் புலவரும்; மன்னன் நிலையையும் தன நிலையையும் எண்ணி மனம் நொந்து திரும்புகிறார்
காட்டுப்பாதை மதியவெய்யில் நடைக்களைப்பு பசிமயக்கம் மனச்சோர்வு துவண்டு போன புலவரும் தெருவோர மரநிழலில் அமர்கிறார் .அமர்ந்தவர் அப்படியே அயர்ந்து தூ ங்கி விடுகிறார் அப்போது அவ்வழியால் வழிப்போக்கன் ஒருவர் வருகிறார் மரத்தின் கீழ் அயர்ந்து தூ ங்கிக்கொண்டு இருக்கும் மனிதரைப் பார்க்கிறார் கசங்கி கந்தலான உடை; வாடி களைத்து சோகம் படர்ந்த முகம் ,அந்த சோகம்படர்ந்த முகத்திலும் கலக்கமில்லா ஒளிவீச்சு ,இவர் நிட்சயமாக அறிவு நிறைந்த முனிவர் .ஞ னி.ஏன் தமிழ் புலவராகக் கூட இருக்கலாம் என எண்ணிக் கொண்டவன் .இவர் பசிக்களைப்பில் உறங்குகின்றார் என்பதை ஊகித்துக் கொண்டான் “ஐயா !பெரியவரே !!”என தட்டி எழுப்பி; தனது குடுவையில் இருந்த நீரைப் பருகக் கொடுத்தான் .கண் விழித்தவர் அவன் கொடுத்த நீரை பருகியவாறு அவனைப் பார்த்தார் .பழுப்பு ஏறி ககசங்கிய உடை சவரம் செய்யப்படாது, எண்ணை படாத வெண்தாடி, நீண்டுவளர்ந்த தலைமுடி, முறுகேறி ய் கைகள் ,திரண்ட புயங்கள், இடையிலே செருகிய குத்து வாள் .முகத்திலே அரசகளை நிச்சயமாக இவன் அரசகுமாரனாக அல்லது அரசவம்சத்தை சார்ந்தவனாக இருப்பான் என எண்ணியவர் அவனைப் பார்த்து “குறிப்பறிந்து உதவும் நீ சாதாரணமானவன் இல்லை யார் நீ?” என்றார் புலவர் ,அவன் சிரித்துக்கொண்டே தனது துணி முடிச்சை அவிழ்த்து பழங்களையும் கிழங்குகளையும் தேனையும் அவர்முன் வைத்து முதலில்” இதைப்புசியுங்கள் “என்றான் சிரித்தவாறு .அவற்றைப் புசித்தவாறு மீண்டும் புலவர் கேட்டார் யாரப்பா நீ சொல்லமாட்டாயா ?என்று சிரித்தவாறே அவன் கேட்டான் “தாங்கள் யார் ?உங்களுக்கு ஏன் இந்த நிலை ?விபரம் தரமுடியுமா? என்றான் .”உன்செய்கைகளை பார்த்தால் குமணமன்னனுக்குரிய்அன்பு ஈகை யை உன்னிடம் காண்கிறேன் “என்றவர் தன்னிலை கூறத் தொடங்கினார் வறுமையும் புலமையும் சேர்ந்தே இருக்கும் வறிய தமிழ் புலவன் நான்னப்பா ,தன்னைத் தேடிவரும் தமிழ் புலவர்களுக்கு தமிழ் வளர வாரிவழங்கும் வள்ளல் குமணனிடம் சென்று எனது நிலை கூறி பாடிப்பரிசுகள் பெறலாம் என்ப்போனேன் .ஆனால் நிலைமை வேறாக இருந்தது தம்பியின் சூழ்ச்சியால்,,நாடிழந்து குமணன் தலைமறைவானதாக அறிந்தேன் அதனால் வேதனையோடு வீடேகிறேன் என்றார்
அப்படியா ?எனக்குறிக்கிட்ட வழிப்போக்கன் “அவன் தம்பி இளங்குமரனை பாடிப்ப்ரிசுகளை பெற்று இருக்கலாமே “எனகூறினான் சினத்துடன் புலவர”கொடுங்கோலனை போற்றிப்பாடி உயிர் வாழ்வதைவிட வறுமையில் சாவது மேலானது “எனப்புலவர் கூறவும் உணர்வு மேலீட்டால் தன்னை மறந்து “நான் ஆட்சியில் உள்ளபோது வந்திருந்தால் அள்ளியள்ளித் தந்திருப்பபேன் இப்போது என்னிடம் தருவதற்கு எதுவுமே இல்லையே என்ன கொடுமை “என்ப்புலம்பவும் திகைப்புடன் வழிப்போக்கனைப் பார்த்து புலவர் “அப்படியென்றால் நீ ,,,,,,நீ ,,,,,,,,குமணமன்னனா “என்க்கேட்கவும் இனி மறைப்பதுக்கு எதுவும் இல்லை எனப்புரிந்து கொண்ட வன் “ஆம் …நான் குமணமன்னன் தான் என்றான் ,கண்கள் குளமாக மன்னவனை கட்டியணைத்து ஆரத்தழுவிய புலவர்
“என்ன கொடுமையிது பட்டாடை புணைந்து வெண் கொற்றை குடையின்கீழ் செங்கோல் தரித்து ஆட்சி புரிநத உன்னை இந்தக்கோலத்தில் பார்க்கும் பாவியாய் போனேனே இத்தனை துன்பம் உனக்கு தந்தும் அடங்காத கொடுங்கோல் மன்னன் இளங்குமரன் .உன் தலைக்கும் விலை பேசிவிட்டான் “எனக்கூற குறுக்கிட்ட மன்னன் “என்ன சொன்னீர்கள் “என்றான் புலவர் “ஆமாம் !மன்னா !!உனது தலையை கொண்டு வருவேர்க்கு பொற்காசுகள் தருவதாக முரசு அறிவித்துள்ளான் “என்றார் கோபமுடன் “ஆகா ,,,ஆகா ….நல்லது இதுவரை உங்களுக்கு எது தருவது எனக்குழம்பினேன் புலவரே தந்தால் ஏற்பீரா “என்றவன் தொடர்ந்து “புலவரே என்தலைக்கு தம்பி பொற்காசு தருவான் அல்லவா எனவே என்தலையை நானே கொய்து தருகிறேன் அதை அவனிடம் கொடுத்து பொற்காசுகளைப் பெற்று உங்கள் வறுமையை தீர்த்துக் கொள்ளுங்கள் “என்க்கூறியவாறு தனது இடை வாளை உருவி எடுத்தான் ,உடனே திகைத்த புலவர் உருவிய உடைவாள் கையை பற்றி தடுத்தவாறு “என்னா காரியம் செய்யத் துணிந்தாய் .உன்னுயிர் பறித்து என்னுயிர் வளர்க்கும் அவசியம் எனக்கு இல்லை மன்னா! உன் அன்பும் ஈகை உ ணர்வும் கண்டு நெகிழ்ந்தேன் “என புலவர் கூறவும் “நீர் மட்டும் என்ன நானும் நெகிழ் ந்து போனேன் “என்ப்புதிய குரல் கேட்டு இருவரும் திரும்பிய போது .அவர்களுக்கு அருகே சிரித்துக் கொண்டு நின்றார் .வள்ளுவர் இங்கு நடந்த அத்தனையும் பார்த்துக் கொண்டே இருந்தேன் குமணா !தமிழுக்காக தமிழ் புலவரின் வறுமை நீக்க உன் உயிர் கொடுக்கத துணிந்த உன் ஈகை பண் பு யாருக்கும் வாராது அதனால் உன் ஈகையால் மகிழ்ந்து உனக்காகவே ஓர் குறள் எழுதியுள்ளேன் கேள் “என அதை உரக்க கூறினார்
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. குறள் 223:
ஏழை என்று மற்றவரிடம் சொல்லாதிருப்பதும்,, ஏதும் அற்றவர்க்குத் தருவதும் நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடம் மட்டுமே உண்டு.
குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஈகை.

குறளும் கதையும் 2
நயினை .இளந்திரையன்
அந்நாட்டின் தலைநகரத்தின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள பரந்தவெளி ; அங்கேதான் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும். மதியம்கடந்த மாலைபொழுது அங்கே மக்கள் கூடியுள்ளார்கள் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொட்டகையில் மன்னன் கிள்ளிவளவன், அமைச்சர்கள் ,தளபதிகள் ,கற்றோர் மற்றோர் புடைசூழ அமர்ந்துள்ளான் .மந்திரி எழுந்து மக்கள்முன் அந்த ஓலையை வாசிக்கிறார் “மக்களே !எம்மன்னன் எதிரிநாட்டின் மீது படைநடத்தி எதிரியை வீழ்த்தி .வெற்றிபெற்று வந்தார் .மக்கள் அறிந்ததே .,வென்று வரும்போது பகைமன்னனின் இரு குழந்தைகளை சிறைப்பிடித்து வந்தார் ,அக்குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் யா ணையின் காலால் கொல்லப்படப்போகிறார்கள் “எனக்கூறி அமர்ந்தார் .மக்கள் திகைத்து ;கலங்கி ,செய்வது அறியாது நின்றனர் .மைதானமத்தியிலே குழந்தைகளு ம் யானையும் கொணர்ந்து நிறுத்தப்பட்டது .மக்கள் குழந்தைகளை பார்த்தார்கள் இன்னும் சிறிதுநேரத்தில் யானையின் காலில் அகப்பட்ட அத்திப்ப்ழம் போல் ஆகப்போகிறோம் என்பது அறியாது ,யானையைக்கண்ட மகிழ்வில் கைகொட்டிச்சிரித்து. அதன் அசைவுகளை கண்டு துள்ளிக்குதித்து மகிழ்ந்தார்கள் .மக்கள் பதைத்தார்கள் பால்வடியும் பிஞ்சுமுக ம். ;பயம் அறியாவிழிகள் ;.சூதுவாது இல்லா நெஞ்சம் ;.இவர்களை க்கொல்ல மன்னவனுக்கு எப்படி மனம்வந்தது தந்தைமேல் கொண்ட பகையை வஞ்சத்தை இச்சின்னம்சிறிதுகள் மீது காட்டுவது முறையோ ?என மனம் துடித்தாலும் கேட்க்கும் துணிவு யாருக்கும் இல்லை .ஆட்சி ,அதிகாரம் அவனிடம் இருப்பதால் ஆடுகிறான் என்க்கூறிக்கொண்டார்கள் .
இது இவ்வாறு நடக்க ஒளவையார் ,மன்னனும் தனது நண்பனுமான கிள்ளிவளவனைப்பார்க்க அவனது அரண்மனைக்குப்போகிறார் .(இங்கு ஒன்றைக்கூற லாம் .அக்காலத்தில் புலவர்களும் மன்னவர்களும் நணபர்களாக இருந்தார்கள் மன்னனை புகழ்ந்து பாடினாலும் அவன் தவறு செய்தால் தயங்காது துணிந்து
இடித்து உரைத்து எடுத்துக்காட்டினார்கள் .நட்போடு பழகினார்கள் .)அங்கே வாயிற்காப்போர் ஒளவையாருக்கு மன்னவன் எங்கு சென்றுள்ளார் அங்கே என்ன நடக்கப்போகிறது என்பதை எல்லாம் விரிவாகச்சென்னார்கள் .துடித்துப்போன ஒளவையார் அதைதடுக்கவேண்டும் என்ற நோக்கோடு வேகமாக
அந்த மைதானம் நோக்கி விரைந்தார் .மைதானத்தில் பயம் அறியாச்சிறுவர்கள் முன்னே யானை ..மன்னன் காவலர்கள் நோக்கி கைஅசைக்கவும் யானையை பிணைத்திருந்த சங்கிலிகளை விலக்கமுற்படும் வேளை
அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓர் குரல் காற்றோடு வந்தது .”மன்னா!தண்டனையை நிறுத்து ! வளவா !நிறுத்து !தமிழ்வளர்க்கு வேந்தா நிறுத்து !!நம் தமிழ்மீது ஆணை நிறுத்து !!!மன்னன் கோபமுடன் குரல்வந்த திசை நோக்கிப்பார்க்கிறான் .எதிரே ஒளவையார் .வளவனும் கோபம் தணிந்து “வருக !நண்பரே !வருக !புலவரே !!என இருகரம் நீட்டி ; ஆசனம் கொடுத்து வரவேற்றான் .ஒளவையார் வஞ்சம் அறியாக்குழ ந்தை களையும் யானையையும்பார்த்தார் மனம் துடித்தது .மனன னைபபார்த்துக்கேட்டார் “என்னகாரியம் செய்யத்துணிந்தாய் ?இக குழந்தை கள் உனக்கு என்ன செய்தார்கள்? இராசதுரோகம் செய்தார்களா ?களவு செய்தார்களே ?உன்னோடு போர் செய்தார்களா ?சொல் மன்னா! சொல் !!.மன்னன் “அவர்கள் என் பகைவனின் குழந்தைகள் .”என்றான் ,விரக்தியுடன் சிரித்துக்கொன்டே ஒளவையார் “பகைவன் குழந்தைகள் என்பதால் இத்தண்டனை அப்படியென்றால் பழிதீர்கப்பார்கி றாய் ; வஞ்சம் தீர்க்கப்பாற்கிராய் ;ஆட்சியும் அதிகாரமும் உன்னிடம் இருப்பதால் அப்படித்தானே “அமைசர்களையும் மற்றவர்களையும் பார்த்துக்கேட்டார் ஒளவையார் மன்னவன் செய்வதற்கு எல்லாம் தலையாட்டுவது அல்ல அறிவு ,பதவி .அவன் தவறு செய்தால் தக்கதருணத்தில் சுட்டிக்காடி சரியாக வழிநடத்துவதுத்தான் அறிவு நட்பு .புரிந்துகொள்ளுங்கள் “எனக்கூறி மன்னனைப்பார்த்து
விட்டுவிடு குழந்தை களை “என்றார் மன்னவனும் காவலர்களை பார்த்துச்சொன்னன் “அந்த இராசகுமாரர்களை விடுதலை செய்து இராசமரியாதையுடன் அவர் நாட்டுக்கே அனுப்புங்கள் “என்றவன் ஒளவையரைப்பார் த்து .”நண்பரே !புலவரே !!தக்கதருணத்தில் வந்து அறிவுரை தந்து என்னையும் நாட்டையும் காத்தமைக்கு மிக்க நன்றி “என்றான் .அப்போது அங்கிருந்த ஒருவர் எழுந்துஒளவையாரை பார்த்து “திருக்குறளில் வள்ளுவர் சொன்ன நட்பைப்போல் தக்கதருணத்தில் நடந்துகொண்டீர்கள் அக்குறள் இது தான் என்க்கூறத்தொடன்கினார்
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. குறள் 784:

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்ப்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.
பொருட்பால் – நட்பியல் – நட்பு

 

குறளும் கதையும்-1 

அது அழகான பசுமை நிறைந்த புகழ்பூத்த கிராமம் அந்த ஊரின் அம்மன்கோயிலுக்கு அருகே பலநுறு வருடங்கள் உயிர்வாழும் விழுதுகள் எறிந்து கிளைகள் பரப்பி நிற்கும் ஆலமரம் .அந்தமரத்தின் கிழே ஊர்பெரியவர்கள் கூடிக கதையளப்பார்கள் ஊரின் வளர்ச்சிக்கான திட்டங்களை ஆராய்ந்து முடிவுஎடுத்து செயல்படுத்துவார்கள் சிறியவர்கள் அவ்விழுத்தில் ஆடிமகிழ்ந்து முன்குளத்தில் நீரடிமகிழ் வர் அம்மரம் காகங்களின் உறைவிடமாகவும் இருந்ததது காலங்கள் கடந்தன தங்க இடம் இன்றி தவித்த ஆந்தை க்கூட்டம் காகங்களிடம் வந்து தங்க இடம் தருமாறு வருந்திக்கேட்டன காகங்களும் இரங்கி இடம் கொடுத்தது
நாட்கள் செல்ல ஆந்தைகள் தங்கள் குலப்புத்தியான வஞ்சனை களையும் நரித்தனத்தையும் காட்டி நன்றிமறந்து காகங்களுக்கு எதிரகாப்போர் தொடுத்தன ஆத்திரத்தில் இளம் காகங்கள் துள்ளி எழுந்தபோதும்
அனுபவம் மிக்க பெரிய காக்கைகள் அதை தடுத்து காலம்வரும்போது பார்க்கலாம் என்றன ஆனால் ஆந்தைகள் அட்டகாசம் எல்லைகடந்தது ஓர்நாள் இரவு காகங்கள் தங்களுக்குள் உரையாடவும் அவ்வொலி கேட்ட உச்சாணி கொபபில் இருந்த தலைமை ஆந்தையும் அதைச்சேர்ந்த ஆந்தைகளும் “யாரங்கே என்ன சத்தம்” என அதட்டி அட்டகாசம் பன்னின உடனே காகங்கள் அமைதியாகின இளம் காகங்கள் வீரமுடன் சிலிர் த்து
எழுந்தன தலைமைகாகம் அவர்றையடக்கியது தலைமையைப்பார்த்து “நீர் கோழை வீரம் இல்லை என “ஏளனம் செய்தன அது சிரித்துக்கொண்டே போய் உறங்குங்கள் என கட்டளை இட்டது மணித்துளிகள் கடந்தன ஆதவன் எழுந்தான் கிழக்கு பொலபொலவென விடிந்தது பகல் வந்தது தலைமைகாகம் அம்மரத்தின்
உச்சி நோக்கி பறந்தது அந்தைகளின் தலைமை ஆந்தையோடு தன்னம்தனிமையாக போர் தொடுத்தது தலைமை யோடு கூடி அதை உசுப்பிவிட்ட மற்றைய ஆந்தைகள் அதை கைவிட்டு ஓடிஒளிந்து கொண்டன
பாவம் சொந்த புத்தியற்ற தலைமை ஆந்தை காகத்தின் தாக்குதலை எதிர்க்கசக்தியின்றி காயப்பட்டு குற்றுயிரோடு உயரத்தில் இருந்து கீழோ வீழ்ந்துகிடந்து துடித்தது தலைமை காகம் தன் கூட்டத்தைப்பார்த்து
ஆந்தையின் நிலையைப்பாருங்கள் எனக்கூறி சிரித்தது அதைப்பார்த்த காகக்கூட்டம் மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தன உடனே தலைமைக்காகம் தன கூட்டத்தைப்ப்ப்ர்த்து அளவுக்கு அதிகமாக துள்ளாதீர்கள் நாளை அதன்நிலைமை நமக்கும் வரலாம் எனவே அதன் காயங்களுக்கு மருந்து இட்டு காப்பாற்றுங்கள் என்று கட்டளை இட்டு தன்கூட்டத்துடன் மேலே பறந்துசென்று உச்சிக்கொப்பில் அமர்ந்துகொண்டது
அப்போது ஏனைய காகங்கள் அதைப்பார்த்துக்கேட்டன எப்படி தனியொருவனாக அதை வென்றீர்கள் என அதற்க்கு அது சொன்னது அதாவது ஆந்தைகளுக்கு இரவில் பார்வைப்பலம் உண்டு எமக்கு இல்லை அதனாலேயே அவ்விரவு அமைதியாகவே இருந்த்தேன் பகலில் அவைக்கு பார்வைப்பலம் இல்லை பொழுது விடிந்தது எமக்ககுச்சா தகமானது தாக்குதல் சுலபமானது வெற்றிக்கனி கிடைத்தது வள்ளுவர் குறளில் சொன்னபடி நான் நடந்தேன் வெற்றி கிடைத்தது இது தான் அக்குறள் கேளுங்கள்

பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது * அதிகாரம் 49 காலம் அறிதல் பாடல் 481

 

மேலும் வாசிக்க

மறைந்த பாடகர், திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம்

மறைந்த பாடகர், பாடலாசிரியர் திரு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஆழ்ந்த வருத்தத்தையும் இறுதி அஞ்சலியையும் …