திருமுறைகள்தெய்வத்தமிழாம் திருமுறைகள் பிழையின்றிப் பாடப்படவேண்டியவை

                                                                            

திரு என்ற சொல்லுக்கு செம்மை, மங்களம், தெய்வத்தன்மை பொருந்தியது, சிறப்புக்குரியது என்று பல பொருளுண்டு. ‘முறை’ என்றால் ஒழுங்கு, நேர்த்தி என்று பொருள். திருமுறை என்ற தொடர் தெய்வத்தன்iமை பொருந்திய ஒழுங்கு படுத்தப்பட்ட நூல்வரிசை என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. ‘வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்’ என்கிறது திருமந்திரம். 11ம் திருமுறையில் திருவாலவாயுடையார் திருமுகப்பாசுரம் இறைவனாலேயே திருவாய் மலர்ந்தருளப் பெற்றது. சுந்தரர், மணிவாசகர், சேக்கிழார் ஆகியோரிடம் இறைவன் தாமே கேட்டு, அடியெடுத்துக் கொடுத்து திருப்பாடல்கள் அருளப்பெற்றமையும் ஈண்டு கவனிக்கத்தக்கது. ‘தேவாரம் வேதசாரம்’ என்று காசி . செந்தில்நாதஐயர் விளக்கியிருப்பதையும் காணலாம். மார்கழித் திருவாதிரையில் சிதம்பரத்தில் ஓடாது நின்ற தேர் ஓடவும், இறைவனை இன்பமயமாகக் காட்டும் கொடிஸ்தம்பத்தில் கொடியேறவும் செய்த பெருமை தமிழ் வேதத்திற்கு உண்டு. அப்படிப்பட்ட திருமுறைகளை ஓதுபவர்கள் எப்படி ஓதவேண்டும். என்பது பற்றி கந்தர்மடம் சுவாமிநாத பண்டிதர் ‘திருமுறைப்பெருமை’ என்ற நூலில் நிறையவே குறிப்பிட்டுள்ளார். சனக்கூட்டத்தின் முன் புகழுக்காகவும், தம்பெயரை வெளிப்படுத்தவும், சுயநலத்துடனும் பலர் திருமுறைகளைப் பாட முற்படுகின்றனர். தெருவீதிகளில் நாஸ்திகம் பேசியும் திருக்கோவில்வீதியில் ஆஸ்திகம் பேசியும் பக்தியின்றிப் பண்ணிசைப்பது விரும்பத்தகாதது. திருக்கோயில் கிரியை நெறியில் தோத்திரத்தின் பின்பே வாழ்த்துக் கூறப்படவேண்டும். ஆசீர்வாதத்தில் திருமுறைக்கும் வாழ்த்து உண்டு. திருத்தலங்களில் பல இடங்களில் இதைக் கவனிக்கத் தவறுகிறார்கள். பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமே நிறைவானது. சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லும் போதுதான் முழுப்பயனும் கிடைக்கிறது. திருமுறைகளைப் பாடுவதற்கு பல இடங்களில் பலர் போட்டியுடன் முன்வருகிறார்கள். போட்டியிடபவர்களில் 99 சதவீதத்தினர் முழப்பிழையாகவே பாடுகிறார்கள். அவர்களின் பிழைகள் சொல்லில் அடங்கா. திருமுறைகளின் அடிகளில் மிகக் கொடுமையான தவறுகளை விடுகிறார்கள். பிடியதன் உருகுமை…..
அங்கமும் வேதமும் ஓதும் நால்வர்…..
கங்குல் விளங்ரி…..
பொங்கழல் உருவன் பூதநாயனால் வேமும் …..
குளிர என் கண்கள் குளிர்ந்தனவே
வண்டு பாட மயில் ஆட
மற்றுப்பாற் என்க்கு
இனிப்புவாததன்மை
கற்றுணைப்பூட்டியோர் கடலினுட் பாய்ச்சினும்
உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கரியவன்

என்று இவ்வாறாக சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு விழாவின் ஆரம்பத்தில் மற்றும் கூட்டுப்பிரார்த்தனை நேரங்களில் ஒருவரியை ஒரு தடவைக்குமேல் பாடுவதும், நிரவல் செய்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. ஆனால் சுவாமி சந்நிதானத்தில் ஓர்அடி ஒரு தடவையே பாடப்படவேண்டும். தாம் நினைத்தபடியெல்லாம் பாடக்கூடாது.

இப்போ பல இடங்களில் குறித்த இலக்கண விருத்தத்தில் பாடல்களை எழுதி அதற்குப் பண் குறிப்பிடுகிறார்கள். இது எமது துர்ப்பாக்கியமே. அருளாளர்கள் தந்த தெய்வத்தமிழ் இருக்க, ஆரவாரிகளின் வெற்றுப்பாடல்கள் பின்னோருக்குக் குழப்பமாக அமைந்துவிடுகிறது. பண்பாடும்போது எழுத்து, சொல், பொருள், அடி தவறாமல் பக்திக்குப் பங்கம் இல்லாமல் பாடவேண்டும். இதன் பின்னரே இராக, தாள வித்தைகள் அமையவேண்டும். பாடப்படுகின்ற திருமுறைகளை எழுத்து, சொல், பொருள், அடி பிiழையின்றி பாடும்போதுதான் அந்தப்பாடல் உயிர்பெறுகிறது.

அப்படி உயிர்பெறுகின்ற பாடலுக்கு இராக, தாள அலங்காரங்களை அமைத்துக்கொண்டால் சிறப்பு. அவைதான் இறைவனை மகிழ்விக்கக் கூடியவை. அதைவிடுத்து பாடலின் எழுத்து, சொல், பொருள், அடி போன்றவற்றைப் பிழையாகப் பாடி, உயிரற்ற பாடலுக்கு இராக, தாள அலங்காரம் எதற்கு? இராக தாளத்தை மட்டுமே கருத்திற்கொண்டு தெய்வத் திருமுறைகளைப் பாடும்போது தாளத்தின் முக்கியத்திற்காக குறிலை நெடிலாகவும், நெடிலைக் குறிலாகவும் பாடினால் அந்த திருமுறையின் சாரமே அற்றுவிடுகிறது.

பதவியில் உள்ளவர்கள், அறிஞர்கள், நிறுவனங்கள் எல்லோரும் திருமுறைகளை வளர்க்க முன்வரவேண்டும். திருமுறை நூல்கள் பலராலும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவை. பண்ணிசைப் போட்டிகளில் பங்கு பெறுவோர் பரிசிற்காகவும், புகழுக்காகவும் மாணவப் பருவத்தில் மட்டும் பங்கேற்று பின்பு தேடாது விடுவது வேதனைக்குரியது. மானசீகமாகத் திருமுறையைப் போற்றுங்கள். நால்வர் பொற்றாள் எம்முயிர்த் துணையே.

பிரபல பத்திரிகை ஒன்றிலே மூத்த பண்ணிசைப் பேரறிஞர் கலாபூஷணம் கே.எஸ்.ஆர். திருஞானசம்பந்தன் அவர்கள் வெளியிட்ட கட்டுரையின் ஒரு பகுதி சுருக்கமாக (அவரது அனுமதியுடன்) இங்கே தரப்பட்டுள்ளது.
அன்னாருக்குக் கிடைக்கப்பெற்ற விருதுகள்:-

1. தெய்வத்தமிழிசைச் செல்வர் (திருவாவடுதுறை ஆதீனம்)
2. திருமுறைத்தோன்றல் (துறசை ஆதீனம்)
3. பண்ணிசைச் செல்வர் (தமிழகம் கோவை தமிழிசை மன்றம் 1972)
4. பண்ணிசை வேந்தர் (நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் 1976)
5. தேவார இசைமணி (தமிழகம் திருப்பனந்தாள் ஆதீனம 1982;)
6. திருமுறை வித்தகர் (திருமுருக கிருபாவந்தவாரியார் சுவாமிகள்1984)
7. அருளிசை அரசு (கைதடி ஸ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம் 1999)
8. கலைஞான கேசரி (இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 2001)
9. பண்ணிசைக் கலாபமணி (சர்வதேச இந்துமத குருபீடம்)
10. சமூகத் திலகம் (யாழ் கொட்டடி கிராம அபிவிருத்திச்சங்கம் 2002)
11. சிவகலா பூஷணம் (யாழ் இந்துசமயப் பேரவை 2002)
12. கலா பூஷணம் (கலாச்சார அலுவல்கள் திணைக்களம் – இலங்கை அரசு 2002)
13. கலைஞானச்சுடர் (நல்லூர் பிரதேச செயலகம் 2005)

தகவல் மற்றும் தொடர்பு:- பேரி சொக்கலிங்கம்.

மேலும் வாசிக்க

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *