முகப்பு / சமயகுரவர்கள்

சமயகுரவர்கள்

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்த சோழ நாட்டிலுள்ள சீர்காழி எனும் பதியிலே சிவபாத இருதயருக்கும் பகவதியாருக்கும் மகனாகப் பிறந்தார்.
இவரிடத்தில் விளங்கிய அற்புதங்களாவன :-
தனது மூன்றாவது வயதிலே உமாதேவியாரின் திருமுலைப்பாலை உண்டது.
சிவபெருமானிடத்தில் பொற்றாளமும்  முத்துப்பல்லக்கும்  முத்துச்சின்னமும்   முத்துக்குடையும்  முத்துப்பந்தரும்  உலவாக்கிளியும்  படிக்காசும் பெற்றது.
வேதாரணியத்திலே வேதங்களினாலே பூட்டப்பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தாலே திறக்கப்பட்ட கதவு அடைக்கும்படியாகப் பாடியது.
பாலை நிலத்தை நெய்தல் நிலமாகும்படி பாடியது.
பாண்டியனுக்கு கூனையுஞ் சுரத்தையும் போக்கியது.
சமணர்களெதிரே தேவாரத் திருவேட்டை அக்கினியிலே போட்டுப் படுக்கையாக   எடுத்தது.
வைகை ஆற்றிலே திருவேட்டைப் போட்டு எதிரேறும்படி செய்தது.

புத்த நந்தியுடைய தலையிலே இடியிடிக்கச் செய்தது.
ஆற்றிலே தாமும் அடியார்களும் ஏறிய ஓடத்தை திருப்பதிகத்தாலே கரை சேர்த்தது.
ஆண்பனைகளைப் பெண்பனைகளாக்கியது.
விசத்தினால் இறந்த செட்டியை உயிர்ப்பித்தது.
இறந்த பெண்ணினுடைய எலும்பைப் பெண்ணாக்கியது.
தமது திருக்கல்யாணத்தினைத் தரிசிக்க வந்தவர்கள் எல்லோரையுந் தம்மோடு அக்கினியிலே புகுவித்து முத்தியடையச் செய்தது.

திருநாவுக்கரசுநாயனார்

திருநாவுக்கரசு நாயனார் திருமுனைப்பாடி நாட்டிலே திருவாமூர் என்னும் ஊரில் புகழனாருக்கும் மாதினியாருக்கும் மகனாகப் பிறந்தார்.

இவரிடத்தில் விளங்கிய அற்புதங்கள் :–

 சமணர்களாலே ஏழுநாள் சுண்ணாம்பு அறையிலே பூட்டப்பட்டு இருந்த போதும் அதிலே வெந்து இறந்து போகாமல் பிழைத்தது.

சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்ட போதும் உயிர் பிழைத்தது.சமணர்கள் விடுத்த
யானையினால் வலஞ்செய்து வணங்கப்பட்டது.

சமணர்கள் கல்லிலே சேர்த்துக்கட்டிச் சமுத்திரத்திலே விட்ட போதும் அக்கல்லே   தோணியாகக் கரையேறியது.

சிவபெருமானிடத்திலே படிக்காசு பெற்றது.

வேதாரணியத்திலே வேதங்களாலே பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப் பாடியது.விசத்தினாலே

இறந்த அப்பூதியடிகளின் பிள்ளையை உயிர்ப்பித்தது.காசிக்கு அப்பால் ஓரு தடாகத்தினுள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேறியது.

சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டிலேயுள்ள திருநாவலூர் என்னும் பதியிலே சடையனாருககும் இசைஞானியாருக்கும் மகனாகப் பிறந்தார்.

இவரிடத்தில் விளங்கிய அற்புதங்கள்:-

 செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக்கொண்டது.

சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னையும் விருத்தாசலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூரில் உள்ள குளத்திலே எடுத்தது.

காவேரி ஆறு பிரிந்து வழிவிடச் செய்தது.முதலை விழுங்கிய  பிள்ளையை அம்முதலையின்
வாயினின்றும் அழைத்துக் கொடுத்தது.வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கைலாசத்துக்கு எழுந்தருளியது.

மாணிக்கவாசக சுவாமிகள்.

மாணிக்கவாசகர் திருவாதவுரிலே சம்புபாதசிருதருக்கும் சிவஞானவதியாருக்கும் மகனாகப் பிறந்தார்.

இவரிடத்தில் விளங்கிய அற்புதங்கள்:-

 சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படிக்கும்  மண் சுமந்து அடிபடும் படியாகவும் பெற்றுக்கொண்டது.

புத்தர்களைத் தருக்கத்தில் வென்று ஊமைகளாக்கிப் பின் ஊமை தீர்த்துச் சைவர்களாக்கியது.

பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமை தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.

தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக்கொண்டது.

எல்லோரும் காணும்படியாகக் கனக சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.

(தொகுப்பு- திரு.பேரி)