* முகப்பு arrow * பஜனை arrow பஜனை
விநாயகர் துதிகள்
* விநாயகர் அகவல்

* விநாயகர் அஸ்டகம்
* விநாயகர் கவசம்
* விநாயகர் ஆரத்தி   
* பிள்ளையார்கதை
பேரவை அங்கத்துவம்
 *உறுப்புரிமை
 
*
விண்ணப்பப் படிவம் 
 *கணக்கறிக்கைகள்
நிழற்படங்கள்

சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013
 * முகப்பு  [பின்திரும்புக]
கணக்கறிக்கை
உள்ளடக்கம்
* ஆக்கங்கள்
* ஆலய வழிபாடு
* நிகழ்வுகள்
* அறிமுகம்
* வாழ்த்துக்கள்
* நன்நெறிக்கதைகள்
* பஜனை
* சமய குரவர்கள்
* திருக்குறள்
* விரதங்கள்
* இணையத் தளங்கள்
* நிழற்படங்கள்
செய்தி இணையங்கள்
சிவயோக சுவாமிகள்
நற்சிந்தனை
பகுதி - 1
பகுதி - 2
ஆறுமுகநாவலர் * வரலாறு
 * போராட்டங்கள்
 * செய்திகள்

சொற்பொழிவுகள்


வாரியார்
இரு மனைவியர்
*
பகுதி 1
*
பகுதி 2
அரிச்சந்திரா
*
பகுதி 1
*
பகுதி 2
சொற்பொழிவாளர்
சிறிதரன் திருநாவுக்கரசு

"மகாசிவராத்திரி"சொல்வேந்தர்
சுகி சிவம்

அண்ணாமலையார்
பகுதி - 1
பகுதி - 2

சாமி சரணம்
பகுதி - 1
பகுதி - 2


கவிஞர்
கண்ணதாசன்

அர்த்தமுள்ள இந்துமதம்

ஆதிசங்கரர்


    அருளுரை
உங்கள் கருத்துக்கள்
 

 
 
பஜனை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
செவ்வாய், 15 ஜூலை 2008
தொகுப்புக்கள் உள்ளடக்கம்
பஜனை
பக்கம் 2
பக்கம் 3
பக்கம் 4
பக்கம் 5

முருகன் பஜனை

1. முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் யான்.

2. உன்னையொழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை யொருவரையும் பின் செல்கேன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் யான்.

3. மூவிரு முகங்கள் போற்றி
முகம்பொருள் கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சிமாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி.

4. அன்பருக்கு அன்பனே நீ வா வா முருகா
ஆறுபடை வீடுடையாய் வா வா முருகா
இன்பமய சோதியே நீ வா வா முருகா
ஈசனுமை பாலகனே வா வா முருகா
உரக நாபன் மருகனே வா வா முருகா
ஊமைக்கருள் புரிந்தவனே வா வா முருகா
எட்டுக்;குடி வேலவாநீ வா வா முருகா
ஏறுமயில் ஏறியே நீ வா வா முருகா
ஐங்கரனுக் கிளையவனே வா வா முருகா
ஆறுமுக வேலவனே வா வா முருகா
ஒய்யாரி வள்ளிலோலா வா வா முருகா
ஓங்காரத் தத்துவமே வா வா முருகா
ஒளவைக்குப தேசித்தவா வா வா முருகா
அகில லோக நாயகனே வா வா முருகா
ஓடிவாநீ ஓடிவா ஓடிவாநீ வா வா முருகா

5. அரகரோகரா சுவாமி அரகரோகரா
அரகரோகரா சுவாமி அரகரோகரா
கதிர்காம வேலனுக்கு அரகரோகரா
கந்தப்ப சுவாமிக்கு அரகரோகரா
திருப்பரங்கிரித் தீரனுக்கு அரகரோகரா
திருப்பழனிச் செல்வனுக்கு அரகரோகரா
திருவேரகப் பாலனுக்கு அரகரோகரா
குன்றிலாடும் குமரனுக்கு அரகரோகரா
குஞ்சரிதன் கணவனுக்கு அரகரோகரா
குறவள்ளி காந்தனுக்கு அரகரோகரா
குணங்கடந்த வேலனுக்கு அரகரோகரா
சோலைமலைக் கிழவனுக்கு அரகரோகரா
சொகுசுக்கார முருகனுக்கு அரகரோகரா
சிவசக்தி வடிவனுக்கு அரகரோகரா
சிங்கார வேலனுக்கு அரகரோகரா
அகங்கார நாசருக்கு அரகரோகரா
அன்பர்களின் நேயனுக்கு அரகரோகரா
எட்டுக்குடி எந்தைக்கு அரகரோகரா
எங்கும் நிறை இறைவனுக் அரகரோகரா (அரகரோகரா)

6. வேல்முருகா மால்மருகா வாவா சண்முகா
கால்பிடித்தோம் காத்தருள வா வா சண்முகா
நால்வேதப் பொருளான நாதா சண்முகா
நல்லதெல்லாம் உன்பால்கொண்டாய் நாதா சண்முகா
செல்லமாகச் சிவையணைக்கும் சேயே சண்முகா
செங்கதிர்வேல் தாங்கிய என் தேவா சண்முகா
நாறுமாலை அணிமார்பா நாயகா சண்முகா
நாதவிந்து கலாதீத நாயகா சண்முகா
ஆடுமயில் வாகனனே வா வா சண்முகா
பாடும்பணி தந்திடுவாய் பண்டிதா சண்முகா
வீடுநாமம் நின்திருதாள் வேண்டினேன் சண்முகா
வீரன் சூரன் உடல்கிழித்த வேலனே சண்முகா
ஆனந்தனே அற்புதனே வா வா சண்முகா
அடியார் உள்ளக் குகையமர்ந்த ஆண்டவா சண்முகா
தேறுதலைத் தருபவனே தேவா சண்முகா
சிங்கார ஓங்காரச் சீலனே சண்முகா
தில்லையிலே ஆடுந்தேவி பாலகா சண்முகா
எல்லையில்லா அற்புதங்கள் கொண்டவா சண்முகா
தொல்லையெல்லாம் கண்டபதம் தந்திடாய் சண்முகா
தோத்தரித்தோம் எங்கள்முன்னேவந்திடாய் சண்முனா
கல்லையொத்த மனமுருகக் கருணைசெய் சண்முகா
கலீரெனச் சிலம்பொலிக்க ஓடிவா சண்முகா
ஓடிவாநீ ஓடிவாநீ ஓடிவாநீ சண்முகா
ஆடிவாநீ ஆடிவாநீ ஆடிவாநீ சண்முகா

7. முருகா முருகா முருகா முருகா அரகரோகரா
முருகா முருகா திருமால் மருகா அரகரோகரா
வடிவேல் அழகா மயில்வாகனனே அரகரோகரா
வந்தெமை யாள்வாய் வடிவேல் முருகா அரகரோகரா
வடிவேல் முருகா வேல் வேல் முருகா அரகரோகரா
வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா அரகரோகரா
ஞானவேல் முருகா சக்திவேல் முருகா அரகரோகரா
சக்திவேல் முருகா ஐயா முருகா அரகரோகரா
அரகர முருகா சிவசிவ முருகா அரகரோகரா
சிவசிவ முருகா ஜெயசிவமுருகா அரகரோகரா

8. சரணம் சரணம் முருகையா
சரவணபவனே முருகையா
வேர் வளரும் முருகையா
வேண்டுவ தருள்வாய் முருகையா
அறிவைத் தருவாய் முருகையா
ஆறுதல் தருவாய் முருகையா
இன்பம் தருவாய் முருகையா
இன்னல் தீர்ப்பாய் முருகையா
ஈசன் மகனே முருகையா
ஈடேற வைப்பாய் முருகையா
உண்மைத் தெய்வம் முருகையா
உயர்வைத் தருவாய் முருகையா
சேவற் கொடியாய் முருகையா
சேயெனைக் காப்பாய் முருகையா
வழியைச் சொல்வாய் முருகையா
வாழ்வைத் தருவாய் முருகையா

9. கந்தா முருகா வழிகாட்டு
உன் கருணைக் கண்ணால் பழியோட்டு
செந்தேன் போலே மொழி ஊட்டு
இச் சேய்மொழி கேட்டுன் அருள்கூட்டு
வேலைப் பிடித்திடர் செய்பவனே
வெறுப்பிலா தருள் செய்பவனே
காலைப் பிடித்தழத் தேடுகிறேன்
அதைக் காணாமல் நெஞ்சம் வாடுகின்றேன்
அன்னையும் தந்தையும் நீதானே
ஆதரிப்பாய் என்று வந்தேனே
பொன்னையும் பொருளையும் கேட்கவில்லை
ப+விழி திறந்தேன் பார்க்கவில்லை
குன்றுகள் தோறும் கோயில் கொண்டாய்
அன்பினால் சரனின் மாயை வென்றாய்
என்றுகல் நெஞ்சத்துள் கோயில் கொண்டாய்
இப்புவி வாழ்வெனும் மாயை வெல்வாய்
எல்லாம் உனது நாடகமோ
இங்கு யாரறிவார் அதன் காரணமே
வல்லான் உனக்கோர் இணையில்லை
வாழ்வினில் பிறிதோர் துணையில்லை.

10. கதிர்காமக் கந்தனே வா வா முருகா
காலர் காலன் பாலனே வா வா முருகா
சதிராடும் முருகோனே வா வா முருகா
சங்கீதப் பிரியனே வா வா முருகா. (கதிர்காமக்)

சொல்லுக்குச் சொல்லினுக்கும் முருகையா
உந்தன் சுந்தர நாமகீதம் முருகையா
அல்லும் பகலும் சொல்வேன் முருகையா
என்னை ஆள்பவன் நீயல்லவோ முருகையா (கதிர்காமக்)

வேத வேதாந்த ரூபா முருகையா
உன்தன் வேலும் மயிலும் துணை முருகையா
பாத மலர்க் கடிமை முருகையா
என்னைப் பக்தனாய்ப் பாடவைப்பாய் முருகையா (கதிர்காமக்)

எண்சாண் உடம்பினுள்ளே முருகையா
என்னில் எத்தனை எண்ணம் வைத்தாய் முருகையா
பண்ணுடன் பாடவேண்டும் முருகையா
பாவங்கள் தொலைய வேண்டும் முருகையா (கதிர்காமக்)

அகந்தையை மாற்றி நெஞ்சில் முருகையா
நீ அன்புடன் தங்கவேண்டும் முருகையா
முகமதனைக் காட்டிடுவாய் முருகையா
உன்னை மக்காலும் நம்பினேன் முருகையா (கதிர்காமக்)

11. குருநாதன் என்பவனைக் கும்பிடுவோமே - அந்த
கூத்தாடி சிவன்மகனை நம்பிடுவோமே
ஒருநாதன் அவனோடு ஒன்றிடுவோமே - இந்த
உலகெங்கும் அவன் வடிவம் என்றிடுவோமே (குருநாதன்)

இடர் முகத்தில் நாமழைத்தால் வந்திடுவானே - ஏன்
ஏனென்று கேட்பதற்கு முந்திடுவானே
சுடர் முகத்தில் புன்னகையைச் சிந்திடுவானே -நமக்குச்
சொல்லிய சுகமனைத்தும் தந்திடுவானே. (குருநாதன்)

காசுபணம் பெருகிவரச் செய்திடுவானே
கவலையெல்லாம் ஒருநொடியில் கொய்திடுவானே
மாசகல அருள்மழையைப் பெய்திடுவானே
வாசலிலே அவன் நினைவை நெய்திடுவானே. (குருநாதன்)

பக்தரெல்லாம் கூடிவந்து கூடிடுவோமே-நல்ல
பணிணசைக்குத் தாளம் கொட்டி ஆடிடுவோமே
முத்தியெல்லாம் தருபவனை நாடிடுவோமே
முத்தமிழில் அவன் பெருமை பாடிடுவோமே. (குருநாதன்)

12. நீலமயிலேறும் கோலமுருகனை
நித்தம் பணிந்திட வாருங்கடி
காலகால னெந்தை ஆலமுண்டர் கொஞ்சும்
கந்தனைப் பாடிட வாருங்கடி
சூலி சிவகாமி தாலி முத்தமிடும்
சுந்தர பாலனைப் பாடுங்கடி
காலில் சிலம்பொலி கலகலவெனவரும்
கந்தன் அழகினைப் பாருங்கடி (நீலமயி..)

சின்ன முனிவர்க்குச் செந்தமிழ் அமுதை
அன்புடன் பருகத் தந்தவண்டி
வண்ண மயிலேறும் வள்ளலை வாழ்த்தினால்
வந்தின்பம் தருவான் பாருங்கடி
வேலுடன் வந்தன்பர் வேதனை தீர்த்தின்பம்
வேண்ட வேண்டத் தரும் மெய்யனடி
நாலு வேதப்பொருள் ஆறு சமயத்து
நாயகன் எம்முயர் ஐயனடி. (நீலமயி..)

ஓலமிட்டதரர் காலனூர் புக்கிட
ஒய்யாரப் போர்செய்யும் வீரனடி
சீலமெல்லாம் தந்து தேவர்கள் நாட்டிற்கு
சேனாபதியான தீரனடி
கால நிலைகளைக் கருதா வன்பர்க்கு
கருணை பொழியுங் கந்தனடி
பால வடிவனென் பதி கதிர்காமன்
பக்தர்களுக் கென்றும் சொந்தனடி. (நீலமயி..)

13. குமரமலை வீற்றிருக்கும் எங்கள் குலதெய்வம் -தேவ
குஞ்சரியை மணமுடித்த எங்கள் குலதெய்வம்
அரவணையில் வந்துதித்த எங்கள் குலதெய்வம் -சிவ
சண்முகமாய் வந்துதித்த எங்கள் குலதெய்வம்
பழனிமலை வீற்றிருக்கும் எங்கள் குலதெய்வம் -சிவ
பக்தர்களைக் காத்தருளும் எங்கள் குலதெய்வம்
பண்டாரம் போலிருக்கும் எங்கள் குலதெய்வம்
பச்சைமயில் ஏறிவரும் எங்கள் குலதெய்வம்
ஆண்டிவேடம் போட்டிருக்கும் எங்கள் குலதெய்வம்
அண்டினோரை ஆதரிக்கும் எங்கள் குலதெய்வம்
(குமரமலை..)


வேலாயுதந் தரித்த எங்கள் குலதெய்வம்
வேல்முருக நாமம்கொண்ட எங்கள் குலதெய்வம்
தண்டாயுதம் தரித்த எங்கள் குலதெய்வம்
தண்டபாணிப் பெயருடைய எங்கள் குலதெய்வம்
வீப+தி தரித்திரக்கும் எங்கள் குலதெய்வம்
வீறுமயில் எறிவரும் எங்கள் குலதெய்வம்
ஆறுமுகமான பொருள் எங்கள்குல தெய்வம்
ஆறுபடை வீடுடைய எங்கள் குலதெய்வம்
சிவனார்க்கு உபதேசித்த எங்கள் குலதெய்வம்
சுப்ரமண்யப் பெயருடைய எங்கள் குலதெய்வம்
(குமரமலை..)


14. அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும்
முருகாவென் றோதுவோர் முன்.

15. துய்யதோர் மறைகளாறும் துதித்திடற்கரிய செவ்வேள்
செய்ய பேரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்ய சூரர் மார்புகண்ட வேற்படை வாழ்க அன்னான்
பொய்யில் சீரடியார் வாழ்க வாழ்கவிப் புவனமெல்லாம்.

16. வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேள் செவ்வெள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூரர்மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை.

17. மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி யன்னான்
சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

18. அருவமும் உருவமாகி அனாதியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய்நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் உதித்தனன் உலகம் உய்ய.

19. ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்வ வெற்பைக்
கூறுசெய் தணிவேல் வாழ்க குக்கிடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞைவாழ்க யானைதன் அணங்கும் வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியாரெல்லாம்.


 
 
விஷேடதின நாட்காட்டி
Joomla extensions and Joomla templates by JoomlaShine.com

« < ஆவணி 2018 > »
ஞா தி செ பு வி வெ
29 30 31 1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31 1
ஐ.பி.ஸி (தமிழ்)
ஜோதிடம்
 
 *தினப்பலன்
 *வார பலன்
 *ஆங்கில மாத பலன்
 *தமிழ் மாத பலன்


ஜோதிடர்
பாலு சரவண சர்மா


சித்திரை மடல்
அக்னி நட்சத்திரம்

காருடையான்நோன்பு
எவன் துறவி
திருமுறைப்பாடல்கள்

 திருத்தணி
N.சுவாமிநாதன்

மந்திரமாவது..,
துஞ்சலும்..,
காதலாகி..
சொற்றுணைவேதியன்.,
மற்றுப்பற்று..,
தில்லைவாழ்..,
வணங்கத்தலை..,

இணையத்துள் உட்புக

உங்கள் கடவுச்சொல்லை இழந்துவிட்டீர்களா?
உறுப்பினராக சேர விருப்பமா? உங்களை புதிய உறுப்பினராக பதிவு செய்ய…
தற்போது தொடர்பில்
Random images
மாணிக்கவீணை
மாணிக்கவீணை
Category: மாணிக்கவீணை
பண்ணிசை பேச்சுத்திறன்(சேலண்ட்)
பண்ணிசை பேச்சுத்திறன்(சேலண்ட்)
Category: முதற்சுற்றுப் போட்டி(சேலண்ட்)
மாணிக்கவீணை
மாணிக்கவீணை
Category: மாணிக்கவீணை
© 2008 SivaSiva.dk | All Rights Reserved | Site Created By L