ஒளவையார் பிரிவு
இது மழலைகளுக்கான பிரிவு (31-07-2013 க்குப் பினனர் பிறந்தவர்கள்).
தரப்பட்ட இரண்டு தேவாரத்தில் ஏதாவதொன்றையும் அத்துடன் கீழே உள்ள
சிவபுராணத்தையும் பாடிக் காட்டுதல் வேண்டும்.
திருச்சிற்றம்பலம்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக ;
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே
தேவாரம் 2
மந்திரமாவது நீறு
சம்பந்தர் தேவாரம்
பண்: காந்தாரம்
தலம்: திருவாலவாய்
- மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு `
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமணி தன்தாள வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க
சம்பந்தர் பிரிவு
(01-08-2010 தொடக்கம் 31-07-2013 வரையுள்ள பாலர்பிரிவுப் பிள்ளைகள்)
தரப்பட்ட தேவாரத்தையும், அத்துடன் கீழே உள்ள சிவபுராணத்தையும்
மற்றும் புராணத்தையும் பாடிக் காட்டுதல் வேண்டும்.
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
அத்தாஉனக் காளாயினி அல்லேன் எனலாமே.
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
திருச்சிற்றம்பலம்.
அப்பர் பிரிவு
(01-08-2007 தொடக்கம் 31-07-2010 வரையுள்ள கீழ்ப்பிரிவுப் பிள்ளைகள்)
தேவாரம்
அப்பர் சுவாமிகள்
பண்-காந்தாரபஞ்சமம்
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
அருளியவர்: மாணிக்கவாசகப்பெருமான்
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் றனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
பெரியபுராணம்
சேக்கிழார்பெருமான்
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே
இருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலக மெல்லாம்.
சுந்தரர் பிரிவு
(01-08-2004 தொடக்கம் 31-07-2007 வரையுள்ள மத்தியபிரிவுப் பிள்ளைகள்)
தரப்பட்டுள்ள தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு, புராணம் ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின்று அகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலங்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
உன் விரையார் கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர்
ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சயசய போற்றி என்னும்
கைதான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டுகொள்ளே
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா
ஆறணி சடையெம் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் அம்பலத் தரசே
ஏறணி கொடியெம் ஈசனே உன்னைத்
தோண்டனேன் இசையுமாறு இசையே
தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்ட கனகத் திரள்மேரு
விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங் கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
சேக்கிழார்பெருமான்
திருநடங் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதாம் இன்பமாம் என்று
கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்
கைமலர் உச்சிமேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார்.
மணிவாசகர் பிரிவு
( 31-07-2004 க்கு முன்னர் பிறந்த மேற்பிரிவினர்)
தேவாரம் , திருவாசகம், திருவிசைப்பா
திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ் வாழ்த்து ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.
பண்:-கௌசிகம்
சுற்றம்நீ பிரானும் நீ தொடர்ந் திலங்கு சோதிநீ
கற்றநூற் கருத்தும்நீ யருத்தம் இன்ப மென்றிவை
முற்றும் நீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே.
அருளியவர் மாணிக்கவாசகப்பெருமான்
பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்
விண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக்கடவுள் கலிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்
பண் :- பஞ்சமம்
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும் நான் மறக்கேன்
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோட்
கன்னலே தேனே அமுதமே கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே
அருளியவர் சேந்தனார் அருளியபோது
பண் :- பஞ்சமம்
அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல் புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே
அருளியவர் சேக்கிழார்பெருமான்
அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணம் ஓரு முன்றும்
திருந்து சாத்து விகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
மாடக் கூடப் பதிஞான வாழ்வைச் சேரத் தருவாயே
பாடற் காதற் புரிவோனே பாலைத் தேனொத் தருள்வோனே
ஆடற் றோகைக் கினியோனே ஆனைக் காவிற் பெருமாளே
கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.