முகப்பு / Ikke kategoriseret / பண்ணிசைப்போட்டி 2017

பண்ணிசைப்போட்டி 2017

 

ஒளவையார் பிரிவு

 இவர்கள் தாம் விரும்பிய ஒரு தேவாரமும்
ஆத்திசூடியும் பாடுதல் வேண்டும். இவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட மாட்டாது. வெற்றிக்கான கிண்ணங்கள் வழங்கப்படும்.

இது மழலைகளுக்கான பிரிவு (31-07-2011 க்குப் பினனர் பிறந்தவர்கள்).

தேவாரம் 1
தோடுடைய செவியன்
பண் – நட்டபாடை

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநாட் பணிந் தேத்தவருள் செய்த
பீடுடைய பிரமா புரமேவிய பெம்மானிவ னன்றே

தேவாரம் 2

உண்ணாமுலை யுமையாளொடும் 

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

 

சம்பந்தர் பிரிவு

(01-08-2008 தொடக்கம் 31-07-2011 வரையுள்ள பாலர்பிரிவுப் பிள்ளைகள்) 

இரண்டு தேவாரங்களுள் ஒன்றுடன் தரப்பட்டுள்ள புராணத்தையும் பாடுதல் வேண்டும்.

 தேவாரம் 1

நத்தார்படை
பண் – நட்டபாடை

நத்தார்படை ஞானன்பசு
    வேறிந்நனை கவுள்வாய்
மத்தம்மத யானையுரி
    போர்த்தமண வாளன்
பத்தாகிய தொண்டர்தொழு
    பாலாவியின் கரைமேல்
செத்தாரெலும் பணிவான் திருக்
    கேதீச்சரத் தானே

 

 தேவாரம் 2
 பூவினுக் கருங்கலம்
பண் – காந்தார பஞ்சமம்

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நமச்சி வாயவே.

 

 புராணம்

உலகெலாம்….,

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
 நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்  தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

 

 

அப்பர் பிரிவு

(01-08-2005 தொடக்கம் 31-07-2008 வரையுள்ள கீழ்ப்பிரிவுப் பிள்ளைகள்) 

இரண்டு தேவாரங்களுள் ஒன்றுடன் தரப்பட்டுள்ள திருவாசகத்தையும்
புராணத்தையும் பாடுதல் வேண்டும்.

தேவாரம் – 1

மாதர் பிறை கண்ணியானை

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.
  

தேவாரம் – 2
அங்கமும் வேதமும்

அங்கமும் வேதமும் ஓதும்நாவர் அந்தணர் நாளும் அடிபரவ
மங்குன் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே

திருவாசகம்

புற்றில் வாள் அரவும் அஞ்சேன், பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்;
கற்றை வார் சடை எம் அண்ணல், கண் நுதல், பாதம் நண்ணி,
மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து, எம் பெம்மாற்கு
அற்றிலாதவரைக் கண்டால், அம்ம! நாம் அஞ்சுமாறே!

 புராணம்

இறவாத இன்ப அன்பு
   வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்
   பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும்
   வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன்
   அடியின்கீழ் இருக்க என்றார்

 

சுந்தரர் பிரிவு

(01-08-2002 தொடக்கம் 31-07-2005 வரையுள்ள மத்தியபிரிவுப் பிள்ளைகள்) 

தரப்பட்டுள்ள தேவாரங்களில் ஒன்றுடன் திருவாசகம் திருவிசைப்பா
திருப்பல்லாண்டு புராணம் ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.

தேவாரம் – 1

மீளா அடிமை..,

மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
    பிறரை வேண்டாதே
மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
    முகத்தால் மிகவாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
    அல்லல் சொன்னக்கால்
வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
    வாழ்ந்து போதீரே

தேவாரம் – 2 

தாயினும் நல்ல தலைவர்

 தாயினும் நல்ல தலைவர் என்றடியார் 
தம்மடி போற்றிசைப்பார்கள்
வாயினும் மனத்தும் மருவி நின்றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியும் தொழிலர் பால்நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமாமலை அமர்ந்தாரே

திருவாசகம்

சிந்தனை நின் தனக்காக்கி நாயினேன் தன்
கண்ணினை நின் திருப்பாதப் போதுக்காக்கி
வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன்
மணி வார்த்தைக்கு ஆக்கி ஐம்புலன்களார
வந்து எனை ஆட்கொண்டு உள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெரும் கடலே மலையே உன்னை
தந்தனை செந்தாமரைக் காடனைய மேனித்
தனிச்சுடரே இரண்டும் இல் இத்தனியனேற்கே .

திருவிசைப்பா

இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண் டென்னுள்
    இருட்பிழம் பறஎறிந் தெழுந்த
சுடர்மணி விளக்கி னுள்ஒளி விளங்குந்
    தூயநற் சோதியுட் சோதீ
அடல்விடைப் பாகா அம்பலக் கூத்தா
    அயனொடு மால்அறி யாமைப்
படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
    தொண்டனேன் பணியுமா பணியே

 

திருப்பல்லாண்டு

சேலும் கயலும் திளைக்குங்கண் ணார்இளங்
   கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங் கும்மென்று
   புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா நெறிதந்து
   வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின் றானுக்கே
   பல்லாண்டு கூறுதுமே.    

புராணம்

ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி

 

மணிவாசகர் பிரிவு

( 31-07-2002 க்கு முன்னர் பிறந்த மேற்பிரிவினர்)

 தேவாரங்களில் ஒன்றுடன் திருவாசகம், திருவிசைப்பா
திருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ் வாழ்த்து ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.

தேவாரம் -1

என்ன புண்ணியம் செய்தனை 

என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே
இருங்கடல் வையத்து
முன்னம் நீ புரி நல்வினைப் பயனிடை
முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்
வழிபடும் அதனாலே

தேவாரம் – 2

தம்மையே புகழ்ந்து
பண்- கொல்லி

தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப்
பொய்ம்மையாளரைப் பாடாதே
எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்!
இம்மையே தரும் சோறும் கூறையும்;
ஏத்தல் ஆம் இடர் கெடலும் ஆம்;
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே.


திருவாசகம்

பாரொடு விண்ணாய் பரந்த எம் பரனே
பற்று நான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன்
ஆண்ட நீ அருளிலை யானால்
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே.

திருவிசைப்பா

ஏக நாயகனை இமயவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை யெதிரில்
போக நாயகனைப் புயல் வண்ணற் கருளிப்
பொன்னெடுங் சிவிகை யாவூர்ந்த
மேக நாயகனை மிரு திரு விழிமிழலை
விண்ணிழி செழுங் கோயில்
யோக நாயகனை யன்றி மற்றொன்றும்
உண்டென வூணர்கிலேன் யானே.

திருப்பல்லாண்டு

தாதையைத் தாளற வீசிய சண்டிக்(கு)
இவ் அண்டத்தொடும் உடனே
பூதலத் தோரு வணங்கப்பொற் கோயிலும்
போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.

புராணம்

கற்பனை கடந்த சோதி
   கருணையே யுருவ மாகி
அற்புதக் கோல நீடி
   யருமறைச் சிரத்தின் மேலாஞ்
சிற்பர வியோம மாகுந் 
    திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
   பூங்கழல் போற்றி போற்றி

திருப்புகழ்

இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் …… எழில்நீறும்
இலங்கு நூலும் புலியத ளாடையு …… மழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு …… முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய …… குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற …… முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் …… நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் …… வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய …… பெருமாளே.

 

வாழ்த்து

வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்

 

விண்ணப்பம் 

மேலும் வாசிக்க

சைவத் தமிழ்ப் பெருவிழா 05-01-2019

டென்மார்க் பரடேசியா மாநகரில் சென்ற சனிக்கிழமை (05-01-2019) டென்மார்க் சைவத்தமிழ்ப் பேரவையின் 11 ஆவது ஆண்டு விழா மிகச் சிறப்பாக …