முகப்பு / Ikke kategoriseret / அறிவுத்திறன் போட்டி -2017

அறிவுத்திறன் போட்டி -2017

சம்பந்தர் பிரிவு

(01-08-2008 தொடக்கம் 31-07-2011 வரையுள்ள பாலர்பிரிவுப் பிள்ளைகள்)

அறிவுத்திறன் போட்டியில் சில இலகுவான பொதுக்கேள்விகளும் இம்முறை கேட்கப்படும். (வைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை மற்றும் டென்மார்க்கின் ஆலயங்கள் போன்றவை பற்றியவையாக இருக்கும்)

1. நமது சமயம் எது?
சைவ சமயம்

2. நாம் சென்று வழிபடும் இடம் எது?
கோவில்

3. எமது சமயத்தின் முழுமுதல் கடவுள் யார்?
சிவபெருமான்

4. சிவபெருமான் உமாதேவியாரின் பிள்ளைகள்
யாவர்?
பிள்ளையார், முருகன்

5. பிள்ளையாரின் மறுபெயர்கள்; என்ன?
ஆனைமுகன், ஐங்கரன்

6. முருகனின் வாகனம் எது?
மயில்வாகனம்

7. பிள்ளையாருக்கு விருப்பமான பழங்களில் ஒன்று?
மாம்பழம்

8. முருகனின் கையில் உள்ள ஆயுதம் எது?
வேல்

9. ஆத்திசூடி பாடியவர் யார்?
ஓளவையார்

10. ஆனைமுகனின் தம்பி யார்?
முருகன்

 

அப்பர் பிரிவு

 (01-08-2005 தொடக்கம் 31-07-2008 வரையுள்ள கீழ்ப்பிரிவுப் பிள்ளைகள்)

அறிவுத்திறன் போட்டியில் சில இலகுவான பொதுக்கேள்விகளும் இம்முறை கேட்கப்படும். (வைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை மற்றும் டென்மார்க்கின் ஆலயங்கள் போன்றவை பற்றியவையாக இருக்கும்)

கீழ்ப்பிரிவு

1. சிவபெருமானின் சக்தி யார்?
உமாதேவியார்

2. எந்த மாதத்தில் சைவ சமயத்தவர் புதுவருடம்
கொண்டாடுவர்?
சித்திரை மாதம்

3. முருகனின் வேறுபெயர்கள் எவை?
ஆறுமுகன், கந்தன், குமரன்

4.  பிள்ளையார் சுழி என்பது யாது?
‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம்

5.  பஞ்சபூதங்கள்; எவை?
நெருப்பு, விண், காற்று, நீர், நிலம்

6. சைவசமயத்தின் முழுமுதற் கடவுள் யார்?
சிவபெருமான்

7. பிள்ளையாரின் மறுபெயர்கள் எவை?
ஆனைமுகன், ஐங்கரன், விநாயகர்

8. பிள்ளையாருக்கு விருப்பமான பூஜைப்பொருள்?
அறுகம்புல்

9. முருகனின் கொடியிலுள்ள பறவை எது?
சேவல்

10. தேவாரம் பாடியவர்கள் யாவர்?
திருஞானசம்பந்தநாயனார், திருநாவுக்கரசுநாயனார்,
சுந்தர மூர்த்திநாயனார்

11. சைவ சமயத்தவர்கள் உடம்பில் அணியவேண்டிய
அடையாளம் எது?
திருநீறு

12. திருநீறைப் படுத்துக்கொண்டோ நடந்துகொண்டோ
பூசலாமா?
கூடாது

13. இந்துமதத்தின் முதற்பிரிவு நூல் எது?அது எத்தனை
வகை?
வேதம் ஆகும் 4 வகை

14. சிறுபிள்ளைகளுக்கு முதன்முதல் எப்போது ஏடு
தொடக்குவார்கள்?
விஜயதசமி அன்று

15. கோவில் பூசைக்கு பாவிக்காத பூ என்ன?
தாழம்பூ

சுந்தரர் பிரிவு

 (01-08-2002 தொடக்கம் 31-07-2005 வரையுள்ள மத்தியபிரிவுப் பிள்ளைகள்)

அறிவுத்திறன் போட்டியில் சில இலகுவான பொதுக்கேள்விகளும் இம்முறை கேட்கப்படும். (வைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை மற்றும் டென்மார்க்கின் ஆலயங்கள் போன்றவை பற்றியவையாக இருக்கும்)

1.  சைவசமய ஒழுக்கங்களில் சிறந்தது எது?    திருநீறு அணிதல்

2.  முருகனுக்குப் பிடிக்கும் சிலவிரதங்கள் எவை?    கந்தசஸ்டி, கார்த்திகைவிரதம்

3.  மும்மூர்த்திகள் யாவர்?    பிரம்மா, விஷ்ணு, சிவன்

4.  சைவசமய குரவர்கள் நால்வர் யாவர்?    சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்வாசகர்

5.  சிவபெருமானின் வாகனம் எது?முருகனின் வாகனம்    எது?
சிவபெருமான்-நந்தி    முருகன்- மயில்

6.  திருநீறு என்பது யாது?    பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுவதால் உண்டாவது.

7.  திருநீறை எப்படி அணிய வேண்டும்?    நிலத்தில் சிந்தாவண்ணம் சிவசிவ  என்று சொல்லி    வலக்கை   நடுவிரல் மூன்றினாலும் நெற்றியில் அணிதல்     வேண்டும்.

8.  திருவாசகம் பாடியவர் யார்?    மாணிக்கவாசக நாயனார்

9.  வேதங்கள் எத்தனை?அவை யாவை?    நான்கு- இருக்கு,யசூர்,சாமம்,அதர்வணம்

10. இந்து சமயத்தின் மூன்று பிரிவுகளும் எவை?    சைவம், வைணவம், சாத்தம்

11. வைணவர்கள் யாரை முழுமுதற் கடவுளாக         வழிபடுவார்கள்?    திருமாலை (விஷ்ணு) வணங்குவார்கள ;
12. சாத்தர்கள் யாரை முழுமுதற் கடவுளாக         வழிபடுவார்கள்?    அவர்கள் அம்பாளை (சக்தியை) வணங்குவார்கள்

13. கோயிலுக்கு உள்ளே போனவுடன் என்ன செய்ய       வேண்டும்?    பலிபீடத்துக்கு முன்விழுந்து வணங்க வேண்டும்

14. ஆண்கள் எப்படி வணங்க வேண்டும்?    எட்டு உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்க    வேண்டும்.

15. பெண்கள் எப்படி வணங்க வேண்டும்?    ஐந்து உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்க    வேண்டும். 16. ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?    தலை,கை இரண்டு,முழந்தாள் இரண்டு என்ற     ஐந்து உறுப்புகள்.

17. கோவிலை எத்தனை முறை வலம் வர வேண்டும்?    மூன்று,ஐந்து,ஏழு,ஒன்பது முறை.

18. அபிசேகம் நடக்கும் போது கோவிலைச் சுற்றி    வலம் வரலாமா?    உள்சுற்றினை வலம் வருதல் கூடாது.

19. நாயன்மார்கள் எத்தனை பேர்?    63 நாயன்மார்கள்

20. வேதம் யாரால் அருளிச்செய்யப்பட்டது?    சிவபெருமானால்

 
மணிவாசகர் பிரிவு

(31-07-2002 க்கு முன்னர் பிறந்த  மேற்பிரிவினர்)

அறிவுத்திறன் போட்டியில் சில இலகுவான பொதுக்கேள்விகளும் இம்முறை கேட்கப்படும். (வைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவை மற்றும் டென்மார்க்கின் ஆலயங்கள் போன்றவை பற்றியவையாக இருக்கும்)

 1. சைவசமயம் என்றால் என்ன? சிவனை முழுமுதற் கடவுளாகக்கொண்டு வழிபடும் சமயம்.2. ஐந்தொழில்களும் எவை? படைத்தல்,காத்தல்,அழித்தல்,அருளல்,மறைத்தல்.

3. திருமுறைகள் எத்தனை வகைப்படும்?

12 வகைப்படும்.   தேவாரம்  முதல் பெரிய புராணம் வரை.

4. பிள்ளையாருக்கே மட்டுமான வணக்கமுறைகள் எவை?    தோப்புக்கரணம்,தலையில் குட்டி வணங்குதல்.

5. வழிபாடு முடிந்தவுடன் யாது செய்ய வேணடும்? இறைவன் முன் சென்று விழுந்து வணங்கி மந்திரம் சொல்லி விட்டு வீடு செல்ல வேண்டும்.

6. சைவசமயம் எப்போது தோன்றியது?    சைவசமயம் அநாதியானது. அநாதி என்றால்  தொடக்கம் இல்லா காலம் தொட்டு.

7. யார் சைவர்கள்?    சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக்கொண்டு          வழிபடுபவர்கள்.

8. சைவசமயத்தின் முக்கிய நூல்கள் எவை? பன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திரங்களும்

9. திருமுறை,சாத்திரங்களின்அமைப்பு எவ்வாறு உள்ளது?    திருமுறை சிவபெருமானின் பெருமைகளை விளக்கும்,     சாத்திரங்கள் கொள்கைகளை விளக்கும் நூலாகவும் உள்ளன.

10. பஞ்சபுராணம் என்றால் என்ன? மூவர் தோவாரங்களில் ஒரு பாடலும் திருவாசகத்தில் ஒரு பாடலும்  திருவிசைப்பா,திருப்பல்லாண்டு,பெரிய புராணத்தில் ஒரு பாடலுமாக மொத்தம் 5 பாடல்கள்.

11. பன்னிரு திருமுறைகளில் மொத்தம் எத்தனை     பாடல்கள்?     497 பாடல்கள் 12. சைவ சித்தாந்தம் என்றால் என்ன? முடிந்த முடிவு

13. மும்மூர்த்திகள் யாவர்?அவர்கள்; செய்யும் தொழில்கள் எவை? படைத்தல்-பிரம்மா,காத்தல்-திருமால்,அழித்தல்உருத்திரன்

14. சைவசமயம் கூறும் வழிபாட்டுமுறைகள் யாவை? குரு, லிங்க, சங்கம வழிபாடு.

15. புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்? சிவ இன்பத்தையும் சுவர்க்க இன்பத்தையும்

16. பாவங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்? நரகத்தில் விழுந்து துன்பத்தை  அனுபவிப்பர்.

17. திருநீறு முக்குறியாக அணியத்தக்க இடங்கள் எவை? தலை,நெற்றி,மார்பு,கொப்புள்,முழந்தாள் இரண்டு,புயங்கள் இரண்டு,முழங்கை இரண்டு,மணிக்கட்டு  இரண்டு,விலாப்புறம் இரண்டு,கழுத்து ஆகிய 16 இடங்கள்.

18. திருநீறு நெற்றியில் முக்குறியாக அணியும் போது எவ்வளவு நீளம் அணிய வேண்டும்? இரண்டு கடைப்புருவ எல்லைவரை,கூடினாலும் குறைந்தாலும் குற்றமாகும்.

19. உருத்திராட்சம் அணியத்தகுதியானவர்கள் யார்? மதுபானமும்,ஊன்உணவும்இல்லாதவராய் ஒழுக்கம் உடையவராய் உள்ளவர்.

20. ஆண்கள் எப்படி வணங்க வேண்டும்?    எட்டு உறுப்புகளும் நிலத்தில் படும்படி வணங்க வேண்டும்.

மேலும் வாசிக்க

பண்ணிசை, மற்றும் போட்டித் திகதி: 10-09-2017

எமது பண்ணிசை, பேச்சு மற்றும் தேவாரப்போட்டிகள் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை வயிலை நகரில் பின்வரும் பாடசாலையில் நடைபெறும் என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம். Hældagerskolen …