முகப்பு / Ikke kategoriseret / சித்ரா பவுர்ணமி விரதம் 21-04-2016

சித்ரா பவுர்ணமி விரதம் 21-04-2016

சித்ரா பவுர்ணமி விரதமிருக்கும் முறை

சித்ரா பவுர்ணமி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். எமதர்மனின் உதவியாளர் சித்திரகுப்தன் நம் பாவக்கணக்குகளை வைத்து நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாவுக்கேற்ப பலன்களை வழங்குகிறார். சித்ரா பவுர்ணமியன்று கீழ்க்காணும் சக்தி வாய்ந்த விரத முறையை சித்ர குப்தனை நினைத்து மேற்கொண்டால் நல்ல பலன் கிடைப்பது உறுதி. 21-04-2016 அன்று சிறப்பு வாய்ந்த சித்ரா பவுர்ணமி வருகிறது. அன்றைய தினம் இந்த விரதத்தை மேற்கொண்டு வாழ்வில் வளம் பெறுங்கள்.

சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (நோட்புக், பேனா ) வைத்து, ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு” என்று எழுதி வைக்க வேண்டும்.

சர்க்கரை பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.

தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும். இந்த வழிபாட்டின்போது,

சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்” 

என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம். சித்தரகுப்த வழிபாடு- சித்திரா பௌர்ணமி வழிபாடு “சித்திரைப் பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும்! செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும் தீமைகள் நீங்க வேண்டும்” சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் பவுர்ணமியானது எமதர்மனின் கணக்காளரான சித்ரகுப்தருக்கு மிகவும் புனிதமானது”சித்ரகுப்த” என்ற வடமொழிச் சொல்லுக்கு `மறைந்துள்ள படம்’ என்பது பொருள்.

சித்திரகுப்தன் நமது பாப புண்ணியங்களைக் கணக்கிடும் ஒரு தேவன். சித்ரகுப்தனைத் திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும்.

மேலும் வாசிக்க

பொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.

எமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது …