முகப்பு / சிறப்புப் பதிவுகள் / மரணம் என்பது என்ன?

மரணம் என்பது என்ன?

அளிக்கப்படுகின்றன. அவனுக்கு அப்படி? எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று வாதாடிப் பயனில்லை. உன் வாதம் எந்தக் கோட்டைக்குப் போயும் ஜெயிக்காது! புண்ணியம் செய்தால் இன்னொரு நல்ல உடம்பு! இன்னொரு உலகம்! பாவமே செய்தால் இன்னொரு உடம்பு! இன்னொரு உலகம்! இப்படித்தான் ஆன்மா வேறு ஒரு உடம்பு! வேறு ஒரு பிறவி வேறு ஒரு உலகம் என்று நீண்ட நெடிய பயணத்தில் சஞ்சரித்தபடி இருக்கிறது. ஞானம் உள்ளவன் இந்த உண்மையைப் புரிந்து கொண்டான்இ அஞ்ஞானி விஞ்ஞானம் பேசிக் கொண்டு மதி மயங்கிக் கிடக்கிறான். மற்றவா்களையும் மயக்குகிறான். மொத்தத்தில் இந்த வாழ்க்கை ஒரு பரமபத விளையாட்டு! இந்த ஆட்டத்தில் ஏணியும் உண்டு. பாம்பும் உண்டு.

புண்ணியம் என்ற ஏணி மேலே ஏற்றுகிறது. பாவம் என்ற பாம்பு கீழே தள்ளுகிறது. இப்படி ஏறுவதும், இறங்குவதுமாகவே வாழ்க்கை தொடா்கிறது. பரம பதத்தை அடையும் வரை இந்த விளையாட்டுத் தொடா்கிறது. மனிதன் புண்ணியம் அதிகம் செய்து தெய்வ நிலைக்கும் உயரலாம். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் பன்றியாகப் பிறந்து தாழ்ச்சியும் அடையலாம். இதெல்லாம் டார்வினுக்குத் தெரியாது? ஏன்? அவா் மெய்ஞ்ஞானி அல்ல! அதனால்தான் அவா் மனிதனின் அடுத்த நிலை என்ன என்று சொல்லாமல் போனார். அவா் ஆராய்ச்சி வெளிநோக்கம் கொண்டது. விஞ்ஞானிகளுக்கு உள்நோக்கிப் பார்க்கும் வித்தை தெரியாது. மெய்ஞ்ஞானி அந்த வித்தை தெரிந்தவன். மனித நிலைக்கு முன்னேறி வந்துவிட்ட ஒருவன் மீண்டும் மிருகமாகப் பிறப்பானா? பிறப்பான். ஊரை அடித்து உலையில் போடுபவன், போலி மருந்துகள் உற்பத்தி செய்து கோடி கோடியாகச் சம்பாதிப்பவன், கந்து வட்டி தொழில் செய்து குடும்பங்களை அழித்தவன், உண்ணுகிற உணவில் உணவுப் பண்டங்களில் கலப்படம் செய்து மனிதா்களை நோய் நொடிக்கு ஆட்படுத்தியவன், காமக்கொடூரன், கொலைகளையே செய்து வாழும் கூலிப் படைகள், பட்டம் பதவிகளை வைத்துக் கொண்டு ஆடாத ஆட்டம் ஆடுகிறவன். இவா்கட்கெல்லாம் எப்படி நல்ல கதி கிடைக்கும்.? கருமச் சட்டம் இவா்களை எப்படி விட்டு வைக்கும்? உப்பைத் தின்றவன் தண்ணீா் குடித்துத்தானே ஆக வேண்டும்? இவா்கள் நாயாய், பன்றியாய், கழுதையாய், பல பிறவிகள் எடுத்தே மீண்டும் மனித உடம்பு பெற்று உண்மையை உணர வேண்டும். ஆண்டவனே! நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்று அழுது கெஞ்சி, மன்றாடித் துடிக்கின்றவரை கருமச் சட்டம் வேலை செய்தபடி இருக்கும்!

தேடித்தந்தவர்:- ராஜேந்திரம்.

மேலும் வாசிக்க

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …