பசு தெய்வமா?

கூடக் கூறும் அளவுக்கு பசுவின் மீதான பக்தி உள்ளது. உதாரணமாக கிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்தது மாட்டுத் தொழுவத்தில்தான்இதேபோல் ஏசுநாதர் பிறந்ததும் தொழுவத்தில். பாலைவன சித்தர் என்று புகழப்படும் முகமது நபிகளும் பசுவை நேசித்தவர். ஆரோக்கியமுள்ள ஒரு பசுவை வீட்டில் வளர்ப்பதால் அறிவுள்ள மருத்துவரை வீட்டில் கூடவே வைத்திருப்பதற்குச் சமம் என்று சொல்வார்கள். பசு தரும் பால், தயிர், நெய், கோராஜனை, பாலாடை, வெண்ணை கோமயம், கோஜலம் (சிறுநீர்) தோல், வரட்டி, முடிகள், பரிகார பூஜை (குளம்படி பூஜை)க்கான குளம்புகள் ஸ்டிபம் போட கொம்பு ஆகியன மனித சமுதாயத்திற்கு மிக நல்ல பயன்களைத் தருகின்றன.மேலும் பசுவின் சாணமும்,சீம்பாலும் மிகப்பெரிய நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவை. இந்து சமுதாயத்தில் பசுவை கோமாதா என்று போற்றுகின்றோம்.கோமாதா என்றால் “தெய்வத்தின் தாய்” என்று பொருள். தன்னலம் கருதாமல் அடுத்தவருக்காக வாழும் மனிதர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள்.தனக்காக எதுவும் நினைக்காமல் தன்னை வளர்க்கும் மனிதருக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும் பசு தெய்வம் என்று மட்டும் சொல்லவேண்டியதில்லை “தெய்வத்தின் தாய்”என்றும் சொல்லலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர்
சுப்பிரமணியன்.

மேலும் வாசிக்க

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …