முகப்பு / Ikke kategoriseret / சங்கடகர சதுர்த்தி

சங்கடகர சதுர்த்தி

இதனால் மனம் வருந்திய சந்திரன், தன் சாபத்துக்கு விநாயகரிடமே மன்னிப்பு கேட்டு நிவர்த்தி பெற, விநாயகப் பெருமானை நினைத்து கடும் தவம் இருந்தார். சந்திரனின் தவத்தை ஏற்ற விநாயகர், அவரை மன்னித்து, சந்திரனை தன் நெற்றியில், வட்ட நிலா பொட்டாக அணிந்து கொண்டு, “ஸ்ரீபாலச்சந்திர விநாயகர்” என்ற சிறப்பு பெயரை பெற்றார்.

ஆனால் சந்திரனை கேலி செய்த தவறுக்காக, மீண்டும் அதுபோல ஒரு தவறை யாரும் செய்ய கூடாது என்பதற்கு பாடமாக இருக்க சந்திரனுக்கு ஒரு தோஷத்தை தண்டனையாக தந்தார். ஒவ்வோரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்த்துவிட்டால் அன்றைய நாள் முழுவதும் விக்னேஸ்வரனுக்கு செய்த பூஜையும் பெற்ற புண்ணியமும் பலன் இல்லாமல் போய்விடும்.

அதனால் தெரியாமல் நாம் விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்துவிட்டால், அதற்கு பரிகார நிவர்த்தியாக சங்கடகர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல் தந்து வணங்கினால், தோஷம் நிவர்த்தியாகும்.

விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்ததால் வந்த அவதி

சத்திராஜித். சூரியனை நினைத்து கடும் தவம் செய்து சக்தி வாய்ந்த ஸ்யமந்தக மணியை பெற்றார். “அந்த மணியில் அப்படி என்னத்தான் இருக்கிறது?“ என்று கிருஷ்ணபரமாத்மாவிடம் கேட்டார் ஒருவர். “மிகவும் சக்தி வாய்ந்தது ஸ்யமந்தக மணி.” என்று கிருஷ்ணபகவான், ஸ்யமந்தக மணியை பற்றி விளக்கமாக கூறினார். சில நாட்களிலேயே ஸ்யமந்தகமணி காணாமல் போனது. “அந்த மணியின் சக்தி கிருஷ்ணருக்கு மட்டும்தான் தெரியும். அதனால் அந்த மணியை கிருஷ்ணர்தான் திருடியிருப்பார்.” என்று சத்திராஜித், ஊர்மக்களிடம் கூறினார்.

பொது மக்களும், “சாதாரண வெண்ணையை கூட திருடியவன் கண்ணன். நிச்சயம் அவரே விலைமதிக்க முடியாத ஸ்யமந்தக மணியை திருடியிருப்பார்.” என்று கிருஷ்ணரை கள்வன் என்று பழித்தார்கள். “தாம் திருடவில்லை.” என்பதை நிருபிப்பதற்காக கடுமையாக முயற்சித்து, அந்த ஸ்யமந்தக மணியை கண்டுபிடித்து சத்திராஜித்திடம் கொடுத்து, அந்த மணி எப்படி தொலைந்தது, அது எங்கிருந்தது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கி நிருபித்தார் கிருஷ்ணபரமாத்மா.

“ஒரு நல்லவனை கள்வன் என கூறி விட்டோமே.” என்று மனம் வருந்திய சத்திராஜித், தன் மகள் சத்தியபாமாவை கிருஷ்ணருக்கு திருமணம் செய்து கொடுத்தார். கிருஷ்ணருக்கு கள்வன் என பழி உண்டானதற்கு காரணம், ஸ்ரீகிருஷ்ணர், விநாயகர் சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்ததால்தான் என்கிறது விநாயகர் புராணம்.

மேலும் வாசிக்க

10 வது ஆண்டுப் பெருவிழா 15-11-2018

டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 11 வது ஆண்டு நிறைவுப் பெருவிழா 15-11-2018