இல்லற மாண்பு

என்ற குறளிலே வள்ளுவர் அன்பை முதலில் வலியுறுத்துவது கவனிக்கத் தக்கது. அறங்களை அன்புடன் செய்தல் வேண்டும். குடும்பத்தை அன்புடன் நடத்தல் வேண்டும்.கணவனும் மனைவியும். காதலராகிக் கருத்தொருமித்து ஆதரவு படுத்தல் அவசியம். ஆதரவு  படுத்தலாவது ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருத்தல். மனைவி தற்கொண்டானையும். (கணவனையும்) தற்கொண்டான் மனைவியையும். பேணிக்காத்தல் வேண்டும்.

மனைவி தற்கொண்டானை பேணும் அழகை சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய குறுந்தொகை இப்படி சித்தரிக்கின்றது.

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்.
குழுவுறு கலிங்கம் கழாதுடிக் குவளை
உன்கண் குய்ப்புகை கழுமத்தான் துளந்து
அட்ட தீப்புளிப்பாகர் இனிதென கணவன்
உண்டலின் நுண்ணிதின் மகிழந்தன்று
ஒண்ணுதல் முகனே”

மனைவி கணவனுக்குச் சமையல் செய்கின்றாள் நன்கு பதமான தயிரைப் பிசைந்து புளிக் குழம்பு சமைக்கின்றாள்.  ஆடை அவிழ்கிறது தயிர் பிசைந்த கையாலேயே அதனை சரிசெய்கின்றாள். கையை கழுவிவிட்டுச் சேலையைச் செருகி இருக்கலாம். அப்படிச் செய்தால் தயிர்க் குழம்பு பதம் கெட்டு விடும் என்ற நினைப்பில் கண்ணை உறுத்தும் புகையையும் பொருட்படுத்தாது அடுப்பை விட்டு அகலாது சமைக்கின்றாள்.

கணவன் வேலையால் வருகின்றான் மனைவி தான் தனது கையால் சமைத்த உணவை அன்போடு கணவனுக்கு பரிமாறுகின்றாள். அருமையாக இருக்கிறது என்று சொல்லி அவன் உண்ண அவள் அகமகிழ்கின்றாள்.இதனால் அடிசிற்கு இனியாளாகிய மனைவி தற்கொண்டானை பேணும் சிறப்பு உணர்தப்பட்டது பாடலில்.

அது போலவே  கணவனும் மனைவியைப் பேணுதல் வேண்டும். பிறன்மனைப் நோக்காப் பெருந்தகையாகத் தற்கொண்டாள் மீது அன்பு பாராட்டி அவளை மகிழ்வித்தல் வேண்டும். இல்லறத்துக்கு பொருள் வேண்டும். பொருளில்லாற்கு இவ்வுலகம் இல்லை. பொருளைத் தேடும்பணி அக்காலத்தில் கணவனுக்குரியதாக இருந்தது. அதனால் புறவேலைகளுக்கு கணவனும், அக வேலைகளுக்கு மனைவியும் பொறுப்பாக இருந்தனர். அகம் என்பது பிரதானமாக இல்லறத்தையே குறிக்கும்.. இல்லற நிர்வாகத்துக்கு உரியவள் மனைவியாதலால் அவள் இல்லத்தரசி எனப்படுகின்றாள். இல்லம் என்றால் வீடு என்றும் பொருள். “வீட்டுக்கு நல்ல வளை வை” என்ற பழமொழியிலும் இல்லத் தரசியின் பொறுப்பு பொதிந்திருக்கின்றது. பின் வரும் புறநாநூற்றுப் பாடல் இதனை இன்னும் விரிவாக்குகின்றது.

“நின் நயந்து உறைந்தார்கும் நீ நயந்து உறைந்தார்கும்
பன்மாண் கற்பின்  நின் கிளைமுத லோர்க்கும்
கடும்பின் கடும்பசி தீர யூழநின்
நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
ன்னோர்க்கு என்னாது என்னோடும்  சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் வாழ்த்தும்  என்னாது நீயும்
எல்லோர்ர்கும்  கொடுமதி மனைகீழ வோயே
பழம் தூங்கு முதிரத்து கிழவன்
திருந்து வேற் குமணன் நல்கியவளனே”
என்கிறது புறநாநூறு

இது பொருளைத் தேடிக்கொண்டுவந்த கணவன், பொருளை மனைவியிடம் கொடுத்து
அதனை எப்படி செலவு செய்ய வேண்டும் என்று கூறுகின்ற கூற்றாக அமைகின்றது. கணவன் ஒரு புலவர் பெருஞ்சித்திரனார்  என்று பெயர். அவர் வள்ளல் குமணன் வழங்கிய பொருள்களைத் தன் மனைவியிடம் கொடுத்து அன்புக்கு உரியவளே! பலா மரங்கள் செறிந்த முதிர மலையின் தலைவனாகிய சிறந்த வேற்படை தாங்கிய குமண வள்ளல் தந்த இச் செல்வத்தை நீயே யாவருக்கும் பசி தீருமாறு கொடுப்பாயாக..! உன்னுடைய அன்பு குறித்து உனக்கு உதவி செய்தவருக்கும், இன்னார் இனியார் என்று நோக்காது, என்னைக் கேட்க வேண்டும் என்றும் கருதாது, பிற்காலத்துக்கு உதவும் என்று சேர்த்து வைக்கவும் விரும்பாது நீ எல்லோருக்கும் இதனைக் கொடுத்து உதவுவாயாக! என்று கூறினார்.

இதனால் இல்லத்து நிர்வாகத்தில் மனைவிக்கு இருக்கும் பொறுப்பை உணரலாம். அதுமட்டுமல்ல.
புலவர் தனது மனைவிக்கு கொடுக்கும் உரிமையையும் கவனித்தல் வேண்டும். பெண்களை அடக்கி ஒடுக்கும் பேதமை எமது பண்பாட்டில் இருக்கவில்லை என்பதற்கு இந்த பாடல் நல்ல சான்று.

மேலும் இப்பாடல் விருந்தோம்பல் செய்யவேண்டும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றது. விந்தோம்பி வேளாண்மை செய்தலும், அறிவறிந்த மக்களைப் பெற்று அவர்களை சான்றோர்களாக வளர்த்தலும் இல்லறத்தை மாண்புற வைக்கும் பிற விழுமியங்கள் ஆகின்றன.

வையத்துள் வாழ்வாங்கு வாழ வைக்கும். இவ்வொழுக்கங்களைப் புலம்பெயந்த நாடுகளில் சீரழிய விடாது கட்டிக்காத்து, தமிழர் பண்பாடு ஒழுங்கு முறையான  குடும்பவாழ்க்கைக்கு மிகவே உகந்தது என்பதனை மற்றுவர்களும்  உணரும் வகையில் இல்லறத்தைச் சிறப்புற இயற்றி இன்புற்று வாழ்வோமாக.

நன்றி- சிவத்தமிழ்

மேலும் வாசிக்க

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …