முகப்பு / Ikke kategoriseret / ஆழி மழைக்கண்ணா

ஆழி மழைக்கண்ணா

என்று சொல்லுவது வழக்கம். இச்சந்தர்ப்பத்தில் கடலில் உள்ள மீன்கள் கூட தண்ணீருடன் மேலே சென்று தரையில் விழுந்தமை பற்றிப் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான காரான் பெரிய கப்பல்களைக்கூட இழுத்துவிடும் அளவு வலிமைவாய்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. காரான் தண்ணீர் குடிப்பதை என்வாழ்வில் நான் பலமுறை பார்த்திருக்கின்றேன்.
.
ஆழ்வார்கள் வரிசையில் ஆண்டாள் என்பவர் மிகவும் பிரசித்தமானவர். இவர் கண்ணன்மீது காதல் கொண்டு மானிடக் காதலைத் தெய்வீகக் காதலாக மாற்றிப் பாடல்கள் புனைந்தவர். இவர் தனது திருப்பாவை என்ற தொகுப்பில் காரான் தண்ணீர் குடித்தலைக் கண்ணனது நிறத்திற்கு உவமை கூறியுள்ளார். அப் பாடலையும் அதற்கான விளக்கத்தையும் இங்கே கண்டு கொள்ளலாம். விஞ்ஞானம் வளர்ச்சி அடையாத, அறிவியல் அதிகம் இல்லாத காலத்தில் ஆண்டாளால் இதனை எவ்வாறு கண்டுகொள்ள முடிந்தது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
.
ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
.
பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
.
அன்புடன்
கங்கைமகன்

மேலும் வாசிக்க

பொன்னண்ணா 80 வது பிறந்த தினம்.

எமது டென்மார்க் சைவத் தமிழ் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகரும் காப்பாளருமான அமரர் கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 80 வது …