முகப்பு / சிறப்புப் பதிவுகள் / ஆதி பராசக்தி வழிபாடும் ஆடிப்பூரமும்

ஆதி பராசக்தி வழிபாடும் ஆடிப்பூரமும்

தவ முனிவர்களால் சித்தர்களால் முடியும் என புராணங்கள் கூறுகின்றன.

காஸ்மீர் அமர்நாத் குகையிலும் ,ராஜஸ்தான் காயத்திரி மலை சாரலிலும் பிரயாகையிலும், கரித்துவார் இமய மலை சாரலிலும்.அசாமில் கவுகாத்தியில் காமாக்கியா சக்தி பீடத்திற்கு அருகிலும்,திருவண்ணாமலையிலும்,காசியிலும் ,மேல்மருவத்தூரிலும்,இன்னும பல புனித தலங்களிலும் காலம் காலமாக சித்தர்கள் தவயோகிகளாக இருந்து பல உண்மைகளை உபதேசங்களை ஆன்மீக கருத்துக்களை இந்த உலகிற்கு கூறிவருகின்றார்கள்.

சித்தர்கள் இந்த உலகிற்கு சொல்லும் மூலமான கருத்து என்ன,, உலக தோற்றம் இயக்கம் போன்ற மெய் பொருள் விளக்கங்களோடு ,நல்லது செய்தால் நலமாக வாழ்வாய், வாழ்வில் நேர்மையாக இரு ,உண்மையாக இரு,எந்த உயிர்களுக்கும் தீங்கு செய்யாதே,ஏழைகளுக்கு உதவு என்பன போன்ற கருத்தையே சொல்லி அவற்றை செயலிலும் செய்ய ஊக்குவிக்கின்றார்கள்.தாங்கள் வழி காட்டியாக இருந்து செய்ய வைக்கின்றார்கள்.

வாழ்வில் துன்பத்தில் துவண்டு அந்த துன்பத்தில் இருந்து மீண்டு வரமுடியாமல் அலைந்துகொண்டு திரிபவன் ஆடிப்பூர நன்னாளில் தாயை ஆதி பராசக்தியை சரணடைந்தால் அவன் அந்த துன்பத்தில் இருந்து மீள வழி பிறக்கும் ஒருவன் தன்னை ஆன்மீக பாதையில் அற்பணிக்க தொடங்கி விட்டால் அவனுக்கு நல்ல எண்ணம் நோக்கம் தோன்றும் நல்ல எண்ணமும் நல்ல நோக்கமும் வரும் பொழுது அவன் தீய செயல்கள் பழக்கங்கள் அவனை விட்டு தூர விலகும் எனவே அவன் மீண்டும் நல்ல நிலைக்கு வருவான்.

புவனங்கள் பதின்னான்கையும் படைத்தவள் தாய்.அந்த தாயவள் பூமா தேவி தட்சணாயன கால தொடக்கத்தில் சூரியன் கடக ராசியிலும் சந்திரன் சிம்ம ராசியிலும் சஞ்சரிக்கும் காலத்தில் பூமாதேவி ஆடிப்பூர நன்னாளில் தான் பூப்படைந்து உலகை பூத்து குலுங்க வைக்கின்றாள்.அந்த நாளே ஆடி பூர நன்னாள் என்று நாம் பொதுவாக எண்ணுகின்றோம்.அம்மனுக்கு பூப்புனித நீராட்டு விழா செய்து கோவில்களில் கொண்டாடுகின்றோம்.

ஆடி மாதத்தில்தான் பார்வதிதேவி ஒரு கல்பத்தில் அவதரித்தாள் என்று புராணங்கள் கூறுகின்றன. மீனாட்சி அம்பாள் அவதரித்ததும் ஆடி மாதத்தில்தான். மாலை சூடி கொடுத்த சுடர் கொடியாகிய பூமாதேவி பூமியில் ஆண்டாளாக துளசி மரத்தடியில் அவதரித்து பெரியாழ்வார் திருக்கரத்தில் கிடைத்த நாளும் ஆடிப்பூர நாளாகும்.,ஆடி மாதம் முழுமையாக அம்மன் வழிபாட்டுக்கு உரிய மாதமாக கருதப்படுகின்றது.

ஆடிப்பூர நாளில் ஆதி சக்தி அருள் பாலிக்கும் சக்தி பீடங்களிலும் ஏனைய அம்மன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடை பெறும்.இந்த வழிபாடு பூர்வீக காலத்தில் இருந்தே நடைபெற்று வருகின்றது.ஆடி மாதத்தில் ஆடி கூழ் குடிப்பது ஒரு விழாவாகவே காலம் காலமாக இருந்து வந்தது.இந்த ஆடி பூர நாளில் கோவிலுக்கு வருபவர்களுக்கு கூழ் காச்சி குடிக்க கொடுப்பதும் ஒரு வழக்கமாக இருந்தது இன்று வசதிகள் பெருக வழக்கங்கள் மாற்றம் அடைந்து விட்டது.

மேல் மருவத்தூர் சுயம்பாக தோன்றிய ஆதி பராசக்தி அம்மன் சித்தர் பீடத்தில் கஞ்சி கலயம் எடுத்து கஞ்சி குடிக்க குடுக்கும் அந்த பாரம் பாரிய வணக்க முறையும் வழக்கமும் இன்றும் இருக்கிறது.இந்த ஆலயத்தில் வரும் பெண்கள் அனைவரையும் சக்தியாக போற்றி பாவனை செய்து அவர்களுக்கு சிறப்பு வழிபாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து பெண்களையே அம்மனாக போற்றி வழிபடும் வணக்கமுறை இன்றும் இருக்கிறது. இந்த வழிபாட்டு முறையை சித்தராக அவதரித்து இந்த சித்தர் பீடத்தை இல்லற ஞானியாக இருந்தவாறே நெறிப்படுத்தும் பங்காரு அடிகளார் நெறிப்படுத்தி வருகின்றார். அவர் கொடுக்கும் அறிவு பூர்வமான ஆன்மீக விளக்கங்கள். இந்த சித்தர் பீடத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் பெருமதிப்பு ,தூய தமிழில் மந்திரங்கள் பக்தர்களே ஓதும் முறைகள்.வழிபாட்டில் கலந்துகொள்ளும் மக்களே செய்யும் பூசைகள் தொண்டுகள் அன்னதானம் என்பன மனித வாழ்கையை ஒரு நல்ல முறையில் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.

கலியுகத்தில் ஆன்மீகத்துக்கு எதிரான பல குரல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தாலும் முடிவில் ஆன்மீகமே இந்த உலகில் மனித வாழ்கைக்கு உகந்தது என்பதை நிறுவ சித்தர்கள் ஞானிகள் இந்த யுகத்திலும் தோன்றி தங்கள் கடமையை செய்துகொண்டுதான் இருகின்றார்கள்.எம்முன்னோர்கள் ஆன்மீகத்தை வளர்த்து அதன் மூலம் சமூக சமநிலையை ஏற்படுத்த ஏழைகளுக்கு உதவினார்கள். இன்றைக்கு பல ஆலயங்கள் அந்த நெறிமுறையில் தவறி வழி நடத்தப்பட்டாலும் மேல்மருவத்தூர் சித்தர் பீடம் போன்ற சில ஆலயங்கள் இன்றும் பல்வேறு வழிகளில் ஏழைகளுக்கு உதவிதொண்டாற்றி வருகின்றது.

அம்மனுக்கு உரிய சிறப்பான இந்த ஆடிப்பூர நாளில் தாய்மைக்கே உரிய பண்போடு அகிலத்தில் பிறக்கும் சகல குழந்தைகளும் ஆதி சக்தியின் அரவணைப்பில் அருள் பெற்று எந்த குறையும் இன்றி வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துகொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுகின்றேன் ,,,,,,ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ,,,,,,,,நன்றி வணக்கம் ,,,,,,,சிவமேனகை

மேலும் வாசிக்க

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …