முகப்பு / சிறப்புப் பதிவுகள் / கடவுளை எப்படி வாழவைப்பது..?

கடவுளை எப்படி வாழவைப்பது..?

ன் ஒரு முடிவுக்கு வந்தாள். அதை செயல்படுத்தவும் செய்தாள். எப்படி என்றால், ஒருமுறை முனிவர் வருவதைக் கண்டதும். அந்த சமயத்தில் பார்வதி சிவனோடு இறுக்கமாக இணைந்தபடி அர்த்த நாரீஸ்வரராக காட்சியளித்தாள்.

இதைக்கண்ட முனிவர் ஒருகணம் திகைத்தார். இந்தச் சங்கடத்தை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்தார். மறுகணம் முடிவெடுத்தார் முனிவர். உருவத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய சக்தி அவருக்கு இருந்தது. எனவே ஒரு வண்டாக அவர் மாறினார். அவர்கள் இருவருக்கும் இடையிலே ஒரு துளையைப் போட்டார் அதன் வழியே உள்ளே புகுந்தார். மூன்றுமுறை சிவனை வலம் வந்து சுற்றிவிட்டு சென்றுவிட்டார். பர்வதிக்கு கோபம்.  மகாகோபம். அவளால் சும்மா இருக்க முடியவில்லை. சிவனைப் பார்த்து சொன்னாள். நாதா இதோ பாருங்கள் இனிநான் என்ன செய்தாலும் நீங்கள் அதில் தலையிடக் கூடாது. என்றாள்.  சரி சரி., என்றார் சிவன்

பார்வதி அங்கே மறுநாள் வந்த முனிவரைக் கூப்பிட்டார். இதோ பாரப்பா..! நீ.. என்னை அவமானப் படுத்தினாய்! சக்தியான என்னை நீ அவமானப் படுத்தியதால் இந்த விநாடியில் இருந்து உனது உடலில் உள்ள சக்தியை இழப்பாயாக என சாபமிட்டார். அவ்வளவுதான் அந்தக் கணமே சக்தி எல்லாம் இழந்து வெறும் சக்கையாகி விட்டார் முனிவர். பரம்பொருளான சிவனைப் பார்த்து குளறியழ தொடங்கினார். நமச்சிவாய, நமச்சிவாய, என் சிவனே என்னைக் காப்பாற்று காப்பாற்று என கதறிப் புலம்பினார்.

உடனே சிவன் பக்தா! உன் அறியாமைக்காக வருந்துகின்றேன் என்றார்! என்ன சொல்லுகின்றீர் ஈசா என்றார் முனிவர்.  நானும் சக்தியும் ஒன்றுதான் என்பதை உணர்வாய் என்றார்! ஈசா எத்தனை ஆண்டுகளாக உன்னைச் சுற்றி, சுற்றி வந்தபடி இருக்கின்றேன். இந்த விளக்கத்தை அப்பவே சொல்லித் தொலைத்து இருக்கலாமே என்றார் முனிவர்.

இன்றைய பக்தர்களின் நிலையும்  இப்படித்தான். இருக்கிறது! எல்லாம் ஒன்று என்கின்றான் இறைவன். இல்லை. வேறு வேறு என்கின்றான் மனிதன். இந்த மனிதனை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மதங்களை உருவாக்கினார்கள் முன்னோர். ஆனால், இப்போ மதங்களுக்கு இருக்கின்ற  கவலை! மனிதனை எப்படி வாழவைப்பதென்பதல்ல. கடவுளை எப்படி வாழ வைப்பது என்பது தான் !

முற்றும்.

மேலும் வாசிக்க

விக்கிரகம்

ஆற்றலைத் தாங்கி சேமித்து வைக்கும் திறன் கல்லில் இருப்பதால் மூல கர்ப்பக்கிரகத்தில் கற்சிலைகளையே பிரதிஷ்டை செய்துள்ளனர் ஆன்றோர்கள். உற்சவத்தில் செம்பில் …

Skriv et svar

Din e-mailadresse vil ikke blive publiceret. Krævede felter er markeret med *